அதிகளவு போதைப் பொருள் உட்கொண்டதே காரணம்.. இன்ஸ்டா பிரபலம் மரண வழக்கில் புதிய தகவல்!

anunay sood death cause 2 1763493061508 1 1

இந்த மாதம் தொடக்கத்தில் Wynn Las Vegas ஹோட்டல் அறைக்குள் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ட்ராவல் இன்ஃப்ளூயன்சர் அனுநய் சூத் மரணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.. அதிகளவு போதைப் பொருள் உட்கொண்டதால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.


நவம்பர் 4-ஆம் தேதி, போலீஸ் அதிகாரிகள் அனுநய் சூத் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் சென்றபோது, அவர் அசைவுகளின்றி படுத்திருந்தார்… அவரது உடலின் அருகில் “மயக்க மருந்துகள்” (narcotics) இருந்ததாக கூறப்படுகிறது..

1.5 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த அனுநய் சூத், தனது சமீபத்திய பதிவுகளின்படி Las Vegas Concours 2025 கார் ஷோவில் கலந்து கொள்ள லாஸ் வேகாஸ்க்கு சென்றிருந்தார். அவர் மர்மமான உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

சூத் உடன் இருந்த ஒரு பெண் போலீசாரிடம் பேசிய போது “ அவர்கள் இரவு 4 மணியளவில் கேசினோவில் இருந்த ஒரு மனிதரிடமிருந்து ‘கோகைன்’ என்று நினைத்த ஒரு பொருளை வாங்கினர். அதன் பிறகு, சூத், அந்த பெண், மற்றும் இன்னொரு பெண் அந்தப் பொருளை பயன்படுத்தினர். பின்னர் அனைவரும் தூங்கினர். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இரு பெண்களும் எழுந்தபோது, சூத் மூச்சின்றி கிடந்தார்.

போலீஸ், அறையில் இருந்து அடையாளம் காணப்படாத வெள்ளை தூள் இருந்த ஒரு சிறிய பை மற்றும் அவர்கள் அந்தப் பொருளை மூக்கில் இழுத்து பயன்படுத்தியிருக்கலாம் என்பதற்கான பிற ஆதாரங்களையும் மீட்டதாக தெரிவித்துள்ளது.

அனுநய் சூத் மரணம் குறித்து அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் கடந்த வாரம் Instagram-ல் உறுதிப்படுத்தினர். அவர்கள் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், குடும்ப இல்லத்திற்கருகே யாரும் கூட வேண்டாம் என்றும் followers-க்கு வேண்டுகோள் விடுத்தனர். அவரது கடைசி Instagram பதிவுகள், அவர் இறந்த நேரத்தில் லாஸ் வேகாஸில் இருந்ததை காட்டுகின்றன.

முன்னதாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் வெளியிட்ட அறிக்கையில் “2025 நவம்பர் 4 அன்று, South Las Vegas Boulevard-இன் 3100 block-ல் ஒரு மரணமடைந்த நபர் இருப்பதாக LVMPD (Las Vegas Metropolitan Police Department) பதிலளித்தது. அதிகாரிகள் coroner-க்கு உதவி செய்தனர் மற்றும் இது குற்ற சம்பவம் அல்ல, மருத்துவ காரணம் தொடர்பானதாக இருப்பதால் non-criminal/medical report எடுக்கப்பட்டது. தற்போது அவரது இறப்பு காரணம் மற்றும் அதன் தன்மையை ‘pending’ என்று குறிப்பிட்டுள்ளது.

Toxicology பரிசோதனைகள் மருந்துப் பொருட்கள் மரணத்திற்குக் காரணமா என்பதை உறுதிப்படுத்த தேவையானவை முடிவடைவதற்கு சில மாதங்கள் ஆகலாம் என்று தெரிவித்துள்ளது. எனினும் இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை.

அனுநய் சூத் யார்?

அனுநய் சூத் ஒரு ட்ராவல் இன்ஃப்ளூயன்சர், புகைப்படக் கலைஞர், மற்றும் தொழில் அதிபர். உலகம் முழுவதும் அவர் எடுத்த கவர்ச்சிகரமான பயண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் சிறப்பாக அறியப்பட்டவர். இன்ஸ்டாகிராமில் 14 இலட்சத்துக்கும் (1.4 million) அதிகமான பின்தொடர்பவர்கள், யூடியூபில் 3.8 லட்சம் சந்தாதாரர்கள்

Forbes India Top 100 Digital Stars பட்டியலில் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக (2022, 2023, 2024) இடம் பெற்றவர் ஆவார்.. அவர் முதலில் தனது பயணங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வதிலிருந்து துவங்கி, பின்னர் துபாய் நகரத்தில் தனது சொந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் ஏஜென்சியை தொடங்கினார்.

பல ஆண்டுகளில் அவர் 46 நாடுகள் பயணம் செய்தார். உலகின் 195 நாடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது அவரது பெரிய கனவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : 200 + திரைப்படங்கள்..!! சினிமாவில் இருந்து விலகுவதாக நடிகை துளசி அறிவிப்பு..!! அடுத்து இதுதான் பிளான்..!!

RUPA

Next Post

இன்ஸ்டா காதலியுடன் ஆசை தீர உல்லாசம்..!! திருமண டார்ச்சரால் மாணவியை கொன்று புதைத்த ராணுவ வீரர்..!!

Wed Nov 19 , 2025
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த தீபக் என்ற ராணுவ வீரர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவருடன் பல மாதங்களாக இன்ஸ்டாகிராம் வழியாக பழகி வந்தார். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியதுடன், இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். காலப்போக்கில், மாணவி தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி தீபக்கிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். ஆனால், மாணவியைத் திருமணம் செய்யவோ, தனது பெற்றோரிடம் அறிமுகப்படுத்தவோ […]
Crime 2025 9

You May Like