திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம்..! மெசேஜ் அனுப்ப முடியாமல் ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி..!

instagram down

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியில் செவ்வாய்க்கிழமை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த நேரத்தில் சேவை கோளாறுகளை பதிவு செய்யும் டவுன் டிடெக்டர் (Downdetector) இணையதளத்தில் 10,000க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. பெரும்பாலான பயனர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ள மெசேஜ் (Direct Message) வசதியில் பிரச்சனை இருப்பதாக தெரிவித்தனர். பலர் மற்றவர்களுக்கு நேரடியாக செய்தி அனுப்ப முடியவில்லை என்று கூறினர்.


டவுன் டிடெக்டர் தளத்தில் வெளியான ஸ்கிரீன் ஷாட்டில், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் மக்களிடம் இருந்து குறுகிய நேரத்தில் புகார்கள் திடீரென அதிகரித்ததை காட்டியது.

அந்த தளத்தின் தகவலின்படி, அதிகமானோர் செயலியை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறினர். சிலருக்கு சர்வர் இணைப்பு பிரச்சனையும் ஏற்பட்டதாகவும், மேலும் பதிவுகளை (posts) வெளியிடுவதிலும் அல்லது பதிவிடுவதிலும் சிரமம் ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ், பீனிக்ஸ், சிகாகோ, வாஷிங்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் அதிக அளவில் இந்த சேவை கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்டாகிராம் என்பது பொதுவாக மக்கள் பொதுப் பதிவுகள் மூலம் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும் சமூக வலைதளம். இதில் பதிவுகளை லைக் செய்வது, கருத்து பதிவிடுவது மற்றும் பகிர்வது போன்ற வசதிகள் உள்ளன.

ஆனால் பலர் தனிப்பட்ட முறையில் பேசுவதற்காக டி.எம் வசதியை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த சேவை செயலிழந்ததால் பல பயனர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கினர்.

பயனர்களின் எதிர்வினைகள்

சிலர் சமூக வலைதளங்களில் தங்களது அனுபவத்தை பகிர்ந்தனர். ஒருவர் “இன்ஸ்டாகிராம் முடங்கியது” என்று பதிவு செய்தார். மற்றொருவர் “ இன்ஸ்டாகிராம் டி.எம். வேலை செய்யவில்லையா… அல்லது என்னிடம் மட்டும்தானா பிரச்சனை?” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னொருவர் “இன்ஸ்டாகிராம் தற்போது செயலிழந்துவிட்டதா? எனக்கு டி.எம் வேலை செய்யவில்லை. இது என்னிடம் மட்டும் நடக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

பலர் நேரடியாக டவுன் டிடெக்டர் தளத்திலும் கருத்து பதிவு செய்தனர். பெரும்பாலானவர்கள் இன்ஸ்டாகிராமின் மெசேஜ் வசதி வேலை செய்யவில்லை என்று கூறினர்.

சிலர் இந்த சேவை கோளாறால் நடந்து கொண்டிருந்த உரையாடல்கள் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறினர். ஒருவர் “இன்ஸ்டாகிராம் மூன்று வேறு உரையாடல்களின் நடுவில் திடீரென செயலிழந்துவிட்டது” என்று பதிவிட்டார். மற்றொருவர் “செய்திகளுக்கு பதில் அனுப்ப முடியவில்லை” என்று கூறினார்.

இதனிடையே, ஒருவர் நகைச்சுவையாக “என் நண்பர் என்னை கேள்வி கேட்க ஆரம்பித்தவுடன் இன்ஸ்டாகிராம் செயலிழந்துவிட்டது… கடவுளுக்கு நன்றி” என்று பதிவிட்டார்.

இந்த கோளாறு ஈரான் தாக்குதலுடன் தொடர்பா?

இன்ஸ்டாகிராம் செயலிழப்பு நடந்த நேரத்தில், சிலர் அதை ஈரான் போர் தொடர்பான நடவடிக்கைகளுடன் இணைத்து பேசத் தொடங்கினர். “எதிரி நாடுகளின் தொழில்நுட்ப கட்டமைப்புகளை ஈரான் தாக்குகிறது” என்ற வதந்திகளும் இணையத்தில் பரவின.

ஒருவர் “இதனால்தான் இன்ஸ்டாகிராம் செயலிழந்திருக்கிறது என்று எனக்கு தெரியும்” என்று பதிவிட்டார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் உறுதிப்படுத்தப்படாதவை. தற்போது இந்த சேவை கோளாறு ஏற்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.

மார்க் ஸக்கர்பர்க் தலைமையிலான இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியிடவில்லை.

இதனிடையே, பலர் இன்ஸ்டாகிராமின் X தளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ பதிவுகளுக்கு கீழ் கருத்துகள் பதிவு செய்து, இந்த பிரச்சனையை சரி செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஒரு பயனர் “என் இன்ஸ்டாகிராம் பழைய மெசேஜ்களை லோட் செய்ய முடியவில்லை என்று காட்டுகிறது. என் இணைய இணைப்பில் பிரச்சனை இல்லை. தயவுசெய்து உங்கள் செயலியை சரிசெய்யுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : Flash : தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா? இப்படியே போனா எப்படி..?

RUPA

Next Post

MP கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. போலீசார் தீவிர விசாரணை..!

Wed Mar 11 , 2026
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்.பி கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் அலுவலகம் அமைதுள்ளது. இந்த நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் இந்த அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். மண்ணெண்ணெய் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டு மர்மநபர்கள் தப்பி ஓடி உள்ளனர்.. அலுவலக ஊழியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்தறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.. சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ […]
p chidambaram office attack

You May Like