இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் 141 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.
காலிப்பணியிடங்கள்:
- விஞ்ஞானி/பொறியாளர் – 23
- டெக்னிக்கல் உதவியாளர் – 28
- அறிவியல் உதவியாளர் – 3
- நூலக உதவியாளர் – 1
- நர்ஸ் – 1
- ரேடியோகிராப்பர் – 1
- டெக்னீஷியன் – 70
- வரைவாளர் – 2
- சமையல்காரர்/தீயணைப்பு/ஓட்டுநர் – 12
சம்பள விவரம்:
விஞ்ஞானி / பொறியாளர்: ரூ. 56,100 – ரூ. 1,77,500
- இவை மிஷின் டிசைன், தொழிற்சாலை பொறியியல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், அட்மாஸ்பியர் சயின்ஸ், மெட்ரோலார்ஜிக்கல், அனலிட்டிக்கல் கெமிஸ்டி, கெமிக்கல் பொறியியல் போன்ற பிரிவுகளில் வழங்கப்படும்.
டெக்னிக்கல் உதவியாளர்: ரூ. 44,900 – ரூ. 1,42,400
- கெமிக்கல், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலெக்ட்ரிக்கல், சிவில், கணினி அறிவியல், கம்யூனிகேஷன் போன்ற பொறியியல் துறைகளுக்கு.
அறிவியல் உதவியாளர்: ரூ. 44,900 – ரூ. 1,42,400
- வேதியியல், கணினி அறிவியல், நுண்கலை/காட்சிக்கலை போன்ற துறைகளுக்கு.
நூலக உதவியாளர் / நர்ஸ்: ரூ. 44,900 – ரூ. 1,42,400
- நூலக அறிவியல் அல்லது மருத்துவ சம்பந்தப்பட்ட தகுதிகள் கொண்டவர்களுக்கு.
ரேடியோகிராப்பர்: ரூ. 25,500 – ரூ. 81,100
டெக்னீஷியன்: ரூ. 21,700 – ரூ. 69,100
- ITI / NAC / NTC தகுதிப்பெற்றவர்கள்.
வரைவாளர்: ரூ. 21,700 – ரூ. 69,100
சமையல்காரர் / தீயணைப்பு வீரர் / ஓட்டுநர்: ₹19,900 – ₹63,200
வயது வரம்பு:
* விஞ்ஞானி பதவிக்கு 18 – 30 வயது வரை இருக்கலாம்.
* டெக்னிக்கல் உதவியாளர், அறிவியல் உதவியாளர், நூலக உதவியாளர், ரேடியோகிராப்பர், வரைவாளர், சமையல்காரர், ஓட்டுநர், நர்ஸ் ஆகிய பதவிக்கு 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
* தீயணைப்பு வீரர் பதவிக்கு 18 முதல் 25 வயது வரை இருக்கலாம் .
கல்வித் தகுதி: பதவிக்கு ஏற்ப பிஎ/மாஸ்டர், டிப்ளமோ, ITI/NAC, 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அனுபவம் ஆகியவை தேவை.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு.
தேர்வு மையங்கள்: சென்னை, திருநெல்வேலி
விண்ணப்பிப்பது எப்படி? தகுதியுள்ள இளைஞர்கள் https://apps.shar.gov.in/sdscshar/result1.jsp என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.750 வசூலிக்கப்படுகிறது.
Read more: உங்க வீட்ல ஃப்ரிட்ஜ் இருக்கா..? இந்த தப்பையெல்லாம் பண்ணிடாதீங்க..! – நிபுணர்கள் எச்சரிக்கை..



