நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியில் தனது படங்களை பயன்படுத்த தடை கோரி கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. நீயே விடை என்ற நிறுவனம் தனது படம், பெயரை தவறாக பயன்படுத்துவதாக கூறி கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
உலகநாயகன் என்ற பட்டம், தனது பிரபல வசனத்தையும் அனுமதியின்றி பயன்படுத்துவதாக கமல்ஹாசன் தனது மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று சிபிஐ அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது இந்த மனுவுக்கு பதிலளிக்க நீயே விடை நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது..
மேலும் கார்ட்டூன்களில் கமல்ஹாசன் படத்தை பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று தெரிவித்த நீதிமன்றம் நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.. இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



