ரூ.43,844 கோடி முதலீடுகள்.. 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.. கோவை முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

stalin tn rising

கோவையில் தொழில்துறை சார்பில் நடைபெறும் TN RISING முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ தென்னிந்தியாவின் மான்செஸ்டராக கோவை விளங்கி வருகிறது.. முதலமைச்சராக பதவியேற்ற பின் 15 முறை கோவைக்கு வந்துள்ளேன்.. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி இருக்க வேண்டும்.. இதுவே திராவிட மாடல் அரசின் நோக்கம்..


17 முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.. ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு வருவதை உறுதிசெய்யும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.. நேரடியாகவும் மறைமுகமாகவும் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது..

தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் திமுக ஆட்சியையும் பிரிக்க முடியாது.. 25 ஆண்டுகள் முன்னோக்கி சிந்தித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.. இந்தியாவில் முதல் முறையாக 1997-ம் ஆண்டு ஐடி கொள்கையை கொண்டு வந்தோம்..

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 12,663 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 62,413 நிறுவனங்கள் இருந்தன.. தற்போது 79,185 நிறுவனங்கள் இருக்கின்றன.. எவ்வளவு கோடி முதலீடு என்பதை விட, தமிழகத்திற்கு உகந்த முதலீடா என்பதை பார்க்கிறோம்.. திமுக அரசு வெளிப்படை தன்மை உடன் இருப்பதால் தான் முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் வருகிறார்கள்.. இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு திராவிட மாடல் அரசு உறுதுணையாக உள்ளது..

சமீபத்தில் ஒன்றிய வெளியிட்டுள்ள தர வரிசை பட்டியலில் 4 பிரிவுகளில் தமிழ்நாட்டிற்கு சாதனையாளர் என்ற அங்கீகாரத்தை கொடுத்துள்ளனர்.. வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளுடன் போட்டிப் போட்டு முதலீடுகளை பெறுகிறோம்.

தமிழ்நாட்டில் தொழில்நிறுவனங்கள் வருவதை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.. தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் முதலீடுகளை பார்த்துக் கொண்டு சிலரால் தாங்க முடியவில்லை.. எனவே அரசியல் காரணங்களுக்காக சட்டம் ஒழுங்கு குறித்து தவறான தகவல்களை கூறுகிறார்கள்.. தமிழகத்திற்கு வர வேண்டிய நிறுவனங்கள் வெளி மாநிலத்திற்கு செல்வதாக செய்தி பரப்புகிறார்கள்.. முதலீடுகள் பற்றி தவறான தகவல்களை பரப்புகின்றனர்..

தமிழ்நாட்டில் முதலீடு செய்வோரின் திட்டங்களுக்கு எந்த வித தாமதமும் இருக்காது.. தடையும் இருக்காது.. தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள்..

161 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ.43,844 கோடி மதிப்பிலான முதலீடுகள் மூலம் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் உங்கள் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன்..” என்று தெரிவித்தார்..

Read More : கோவையின் புதிய அடையாளம்.. பிரம்மாண்ட செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

RUPA

Next Post

புதிய இந்தியா பயங்கரவாதத்திற்கு அஞ்சவோ, தலைவணங்கவோ இல்லை: குருக்ஷேத்திரத்தில் பிரதமர் மோடி பேச்சு..!

Tue Nov 25 , 2025
புதிய இந்தியா பயங்கரவாதத்திற்கு அஞ்சவோ அல்லது தலைவணங்கவோ இல்லை என்பதை முழு உலகமும் கண்டதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று குருக்ஷேத்திரத்தில் நடந்த ஒரு நிகழ்வில், ஆபரேஷன் சிந்தூரைக் குறிப்பிட்டு அவர் இந்த கருத்தை கூறினார். இந்தியா அமைதியை விரும்பும் அதே வேளையில், அதன் பாதுகாப்பில் சமரசம் செய்யாது என்று மோடி கூறினார், ஆபரேஷன் சிந்தூரை ஒரு பிரதான உதாரணமாகக் குறிப்பிட்டார். மேலும் “ நாங்கள் உலகிற்கு உலகளாவிய […]
modi n

You May Like