Playoff Schedule: ஐபிஎல் 2025 லீக் நிலை போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. ஆர்சிபி அணி வெற்றி பெற்றதன் மூலம், பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு முற்றிலும் தெளிவாகியுள்ளது. பிளேஆஃப்களின் முழுமையான அட்டவணை என்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
ஐபிஎல் 2025 இன் லீக் நிலை இப்போது முடிந்துவிட்டது. அதன் கடைசி மற்றும் 70வது போட்டி மே 27 அன்று லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில், ஆர்சிபி அணி எல்எஸ்ஜி அணியை வீழ்த்தி பிளேஆஃப்களில் தங்கள் இடத்தை உறுதி செய்தது.பெங்களூரு அணி லக்னோவுக்கு எதிரான 228 ரன்கள் இலக்கை துரத்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு முற்றிலும் தெளிவாகியுள்ளது.
பிளேஆஃப் புள்ளிகள்: ஆர்சிபி வெற்றிக்குப் பிறகு, நான்கு இடங்களும் தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதலிடத்தில் பஞ்சாப் கிங்ஸ், 2வது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மூன்றாம் இடத்தில் குஜராத் டைட்டன்ஸ், நான்காம் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிகள் உள்ளன.
பிளேஆஃப் அட்டவணை: தகுதிச் சுற்று-1 போட்டி வரும் நாளை (மே29) மகாராஜா யதவீந்திர சிங் சர்வதேச மைதானம், முல்லன்பூர், சண்டிகரில் இரவு 7:30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அது நேரடியாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு செல்லும்.
எலிமினேட்டர் சுற்றுப்போட்டி மே 30ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. மகாராஜா யதவீந்திர சிங் சர்வதேச மைதானம், முல்லன்பூர், சண்டிகரில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் தோல்வியடைந்த அணி போட்டியிலிருந்து வெளியேறும், அதே நேரத்தில் வெற்றி பெறும் அணி குவாலிஃபையர்-2 இல் விளையாடும்.
தகுதிச் சுற்று-2 போட்டி , அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஜூன் 1ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தகுதிச் சுற்று-1 இல் தோற்ற அணி மற்றும் எலிமினேட்டரில் வென்ற அணி விளையாடும்.
இறுதிpபோட்டி வரும் ஜூன் 3ம் தேதி மாலை 7.30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதில் குவாலிஃபையர்-1 மற்றும் குவாலிஃபையர்-2ல் வென்ற அணிகள் விளையாடும். இதில் வெற்றிப்பெறும் அணி கோப்பையை வெல்லும்.
Readmore: உலகையே திரும்பி பார்க்க வைத்த’ஆபரேஷன் சிந்தூர்’!. லோகோவை வடிவமைத்தவர்கள் இவர்கள்தான்!