உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்திய ஈரான்..! பதறும் உலக நாடுகள்..!

saudi oil refinery attack

ஈரானின் ஷஹேத்-136 ட்ரோன்கள், சவுதி அரேபியா நாட்டில் உள்ள அரம்கோ நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, சவூதி அராம்கோ நிறுவனம் தனது ராஸ் தனுரா சுத்திகரிப்பு (Ras Tanura Refinery) நிலையத்தில் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.


இந்த தாக்குதலால் அந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தீ மிகக் குறுகிய அளவில் இருந்ததாகவும், விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் ராஸ் தனூரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது நடைபெற்ற இந்த ட்ரோன் தாக்குதல், மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில் நடந்துள்ளது. சமீப காலமாக, ஈரான் வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் அந்தப் பிராந்தியத்தில் சர்வதேச விமான தாக்குதல்கள் நடந்திருந்ததும் இந்த பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ராஸ் தனூரா, உலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நிலையம், தினமும் 5.5 லட்சத்திற்கும் அதிகமான பீப்பாய் எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இதனுடன் இணைந்துள்ள ஏற்றுமதி துறைமுகம், உலகின் பல நாடுகளுக்கு அனுப்பப்படுவதற்காக கோடிக்கணக்கான பீப்பாய் எண்ணெயை கையாளும் வசதியைக் கொண்டுள்ளது.

இந்த வளாகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு அலகுகள், பெரிய சேமிப்பு கிடங்குகள், குழாய் வழித்தடங்கள் மற்றும் சர்வதேச எண்ணெய் டேங்கர் கப்பல்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட பெரிய துறைமுகம் ஆகியவை உள்ளன. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், இந்த மையம் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகளின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.

ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற பகுதிகளுக்கு செல்லும் எண்ணெய் ஏற்றுமதிக்கு ராஸ் தனூரா மிக முக்கியமான மையமாக உள்ளது. எனவே, இந்த நிலையத்தில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். அதே நேரத்தில், உலக எரிசக்தி சந்தைகளில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Read More : ஈரானில் இதுவரை 555 பேர் பலி..! குவைத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானங்கள்..! மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம்..!

RUPA

Next Post

Flash : மஞ்சுவிரட்டு.. மாடுகள் முட்டியதில் 3 பேர் பலி.. சிவகங்கையில் சோகம்..!

Mon Mar 2 , 2026
சிவகங்கை மாவட்டம் சிங்கபுணரி அருகே சதுர்வேதமங்கலம் ருத்திரகோடீஸ்வர் கோயிலின் மாசி மகம் பெருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. 10-ம் நாளான இன்று உலகப்புகழ்பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் சிங்கம்புணர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளை பங்கேற்றன.. இந்த போட்டியில் 112 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.. முதலில் […]
manjuvirattu 3

You May Like