ஈரான்–இஸ்ரேல் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல நாடுகளும் விமான நிறுவனங்களும் ஈரான் மற்றும் இஸ்ரேல் நோக்கி செல்லும் விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. ரஷ்ய விமான போக்குவரத்து துறை வெளியிட்ட தகவலின்படி, ரஷ்ய விமான நிறுவனங்கள் ஈரான் மற்றும் இஸ்ரேல் நோக்கான அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
இதனிடையே, இந்தியாவின் முக்கிய விமான நிறுவனங்களான இண்டிகோ, ஏர் இந்தியா ஆகியவை, ஈரான்–இஸ்ரேல் மோதல் காரணமாக மேற்கு ஆசியாவுக்கான விமான சேவைகளை நிறுத்தியுள்ளன. அதேபோல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும் வளைகுடா பகுதியின் சில பகுதிகளில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மேற்கு நோக்கிச் செல்லும் அனைத்து சர்வதேச விமானங்களையும் இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் பாதுகாப்பே தங்களின் முதன்மை கவலை என்றும், நிலைமையை நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
விமானங்களை ரத்து செய்த அல்லது இடைநிறுத்திய நிறுவனங்கள்
ஏர் பிரான்ஸ்
ஏர் இந்தியா
பிரிட்டிஷ் ஏர்வேஸ்
ஐபீரியா எக்ஸ்பிரஸ்
இண்டிகோ
ஜப்பான் ஏர்லைன்ஸ்
எல்.ஓ.டி. பாலிஷ் ஏர்லைன்ஸ்
லுஃப்தான்ஸா
நார்வேயன் ஏர்
துருக்கி ஏர்லைன்ஸ்
வேர்ஜின் அட்லாண்டிக்
கத்தார் ஏர்வேஸ்
ஏர் அல்ஜீரியா Algerie
ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ்
விஸ் ஏர்
ஈரான் பதிலடி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ‘முன்கூட்டிய தாக்குதல்’ நடத்தியதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே, ஈரான் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளது. சனிக்கிழமை, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்கியதாக தகவல்கள் வெளியாகின. இதில் பஹ்ரைன் நாட்டின் ஜுஃபைர் பகுதியில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-ஆவது கப்பற்படை தலைமையகம் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த தளம் மீது பல ஈரானிய ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களிலும் அமெரிக்க தளம் தாக்கப்படுவதை காண முடிகிறது. இருப்பினும், அமெரிக்கா இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.
இதனிடையே கத்தார் தலைநகர் டோஹாவில் வெடிப்புச் சத்தம் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஈரானிய ஏவுகணைகள் அல்-உதைத் விமானத் தளத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கத்தார் விமான போக்குவரத்து இயக்குனரகம் நாட்டின் வான்வெளியில் விமான இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
அதேபோல், ஐக்கிய அரபு அமீரக நாட்டின் அபுதாபி மற்றும் துபாய் நகரங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. குவைத் நாட்டின் அல்-சாலெம் விமானத் தளமும் ஈரானிய தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. மேலும் சவுதி அரேபியா தலைநகர் ரியாத் பகுதியில் கூட வெடிப்புச் சத்தம் கேட்டதாக தகவல்கள் இருந்தாலும், இதற்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.
அமெரிக்கா விளக்கம்
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் நோக்கம் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் பேசுகையில், “ஈரானிய ஆட்சியிலிருந்து உடனடி அச்சுறுத்தல்களை நீக்கி, அமெரிக்கர்களை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்” என தெரிவித்துள்ளார். கடந்த 47 ஆண்டுகளாக ஈரான் “அமெரிக்காவுக்கு மரணம்” என்ற கோஷத்தை எழுப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மோதல் மத்திய கிழக்கு முழுவதும் பாதுகாப்பு நிலையை கடுமையாக பாதித்துள்ளது. மேலும், விமானப் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் வாழ்க்கையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : ஈரானின் முக்கிய தளபதி கொலை.. உச்சக்கட்ட மோதல்.. இஸ்ரேல் அறிவிப்பு..!



