IRCTC-யில் பணியாற்ற ஆசையா..? தேர்வு கிடையாது.. சென்னையில் நேரடி இன்டர்வியூ..!! உடனே கிளம்புங்க..

railway 2025

ரயில்வே துறையில் பணி வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) தெற்கு மண்டலத்தில் மொத்தம் 64 விருந்தோம்பல் கண்காணிப்பாளர் (Hospitality Monitors) பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது.


காலிப்பணியிடங்கள்:

விருந்தோம்பல் கண்காணிப்பாளர் (Hospitality Monitors) – 64

வயது வரம்பு: அதிகபடியான வயது வரம்பு 28 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு விதிமுறைகளின் அடிப்படையில் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஒபிசி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு தளர்வு வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

* ஐஆர்சிடிசி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை அல்லது ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் அறிவியல் துறையில் B.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

* மேலும், சமையல் கலை, சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை போன்ற துறைகளில் BBA / MBA / M.Sc. பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

* விண்ணப்பதாரர்கள் 2024-ம் ஆண்டுக்கு முன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* துறை சார்ந்த பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டு அனுபவம் அவசியம்.

* விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம், இந்தி மற்றும் உள்ளூரி மொழிகளில் பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளம்: ஐஆர்சிடிசி பணி வாய்ப்புகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இதன்படி, தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பணியுடன் தொடர்புடைய இதர செலவினங்களும் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு நேரடி நேர்காணல் (Walk-in Interview) மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி, தொழில்நுட்ப அனுபவம் மற்றும் தனிப்பட்ட திறன்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்து இறுதி தெரிவு செய்யப்படும்.

நேர்காணல் விவரம்: இந்தப் பணியிடங்களுக்கான நேர்காணல் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் நடைபெற உள்ளது.

  • நவம்பர் 15, 2025 – தரமணி CIT வளாகம்
  • நவம்பர் 18, 2025 – திருவேற்காடு மாநில ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப நிறுவனம்

நேர்காணலுக்கு செல்பவர்கள் https://www.irctc.com/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்ப வேண்டும். அதனுடன், மேலும், 3 சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இணைக்கப்பட வேண்டும். தேவையான அசல் மற்றும் நகல் ஆவணங்கள் அனைத்தையும் கொண்டு வர வேண்டும்.

Read more: மதுப்பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! தொடர்ந்து 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

English Summary

IRCTC has announced a total of 64 Hospitality Monitor vacancies in the Southern Zone.

Next Post

சேலம் வழக்கில் பயங்கர ட்விஸ்ட்..!! அடித்த மாணவர்கள் அப்பாவி.. அடி வாங்கியவர் மீது பாய்ந்தது போக்சோ..!! நடந்தது என்ன..?

Sun Oct 26 , 2025
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் நேற்று தொழிலாளி ஒருவரை மறித்துத் தாக்கி, செல்போனை பறித்துச் சென்ற 3 கல்லூரி மாணவர்கள் குறித்த வழக்கில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழிப்பறி நடந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அம்மாப்பேட்டை அதிகாரிப்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த அந்தக் கல்லூரி மாணவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். […]
Salem 2025 2

You May Like