ரூ.50 நாணயம் வரப்போகிறதா? மத்திய அரசு சொன்ன முக்கிய அப்டேட்..

Government Breaks Silence 50 Note 2

ரூ.50 நாணயம் பற்றிய முக்கிய தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் ரூ.1,ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 ஆகிய நாணயங்களும், ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளன. இந்த நிலையில் ரூ.50 நாணயம் பற்றிய முக்கிய அப்டேட் வந்துள்ளது. நீண்ட நாட்களாகவே புதிய ரூ.50 நாணயம் சந்தையில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியான வண்ணம் உள்ளன.. ஆனால் இப்போது, ​​₹50 நாணயத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெளிவாகக் கூறியுள்ளது. இந்தத் தகவலை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.. பார்வையற்றோருக்காக ₹50 நாணயங்களைக் கோரிய மனு விசாரணையின் போது இந்த தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.


2022 ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு கணக்கெடுப்பை நடத்தியதாக அரசாங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. நாணயங்களை விட ₹10 மற்றும் ₹20 நோட்டுகளை மக்கள் அதிகம் விரும்புவதாக கணக்கெடுப்பு காட்டுகிறது. நாணயங்கள் மிகவும் கனமாகவும் பெரிய அளவிலும் இருப்பதாகவும் மக்கள் உணர்கின்றனர் என்பதை கண்டறிந்துள்ளது. இதன் காரணமாக, ₹50 நாணயத்தை வெளியிட அரசாங்கம் இப்போது எந்த திட்டத்தையும் உருவாக்கவில்லை.

புதிய நாணயத்தை உருவாக்கும் முன், பல விஷயங்கள் சரிபார்க்கப்படும் என்று அரசாங்கம் கூறியது. மேலும் மக்கள் அதைப் பயன்படுத்துவார்களா, அது அன்றாட பயன்பாட்டிற்கு உதவுமா என்பது சரிபார்க்கபப்டும். அதன் பிறகுதான், ஒரு புதிய நாணயம் தயாரிக்கப்படுகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது..

Read More : அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 54% வரை சம்பளம் உயர்வு? ஃபிட்மென்ட் குறித்து புதிய அப்டேட்..

RUPA

Next Post

"எனது பாடலை பயன்படுத்தக்கூடாது.. உடனே நீக்குங்க.." வனிதாவின் Mrs & Mr படத்திற்கு வந்த சிக்கல்..!! வழக்கு தொடர்ந்த இளையராஜா

Fri Jul 11 , 2025
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா வழக்குத் தொடர்ந்துள்ளார். கடந்த 1995-ம் ஆண்டு வெளியான விஜயின் ‘சந்திரலேகா’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகளாக இவர், சமீபகாலமாக டிவி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். தற்போது பவர் ஸ்டாருடன் இணைந்து ‘பிக்கப் ட்ராப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் இன்னும் வெளியாகாமல் […]
vanith

You May Like