பாஜக – தவெக கூட்டணி உருவாகிறதா..? விஜய்க்கு எத்தனை தொகுதிகள்..? பரபரக்கும் அரசியல் களம்..!

vijay bjp

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் திமுக தலைமை கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.. திமுக கூட்டணியில் இதுவரை இல்லாத அளவுக்கு 26 கட்சிகள் இணைந்துள்ளன.. எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்ற


மறுபுறம் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில், பாஜக, அமமுக, அன்புமணி தரப்பு பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.. அதிமுக தலைமையும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.. முதல் கட்டமாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு மத்திய இணையமைச்சர் எல். முருகன், நயினார் நாகேந்திரன் இருவரும் இபிஎஸ்-ஐ சந்தித்து பேசினர்..

அந்த சந்திப்பின் போது பாஜக தரப்பில் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை கொடுத்ததாக கூறப்படுகிறது.. குறிப்பாக அதிமுக வலுவாக உள்ள தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக கூறப்படுகிற்து.. இன்னும் சில நாட்களில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வர உள்ள நிலையில், தொகுதி பங்கீடு விரைவில் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. முன்னாள் பாஜக நிர்வாகியான திருச்சி சூர்யா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.. கூட்டணி பேச்சுவார்த்தை டெல்லியில் தீவிரமாக நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.. மேலும் தவெக 60 தொகுதிகள் எதிர்பார்ப்பதாகவும், அதிமுக தலைமை 40 தொகுதிகள் வரை கொடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.. எனினும் இந்த தகவல் எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை..

RUPA

Next Post

3 குற்றவாளிகளுக்கும் வாழ்நாள் சிறை தண்டனை..! கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு..!

Sat Mar 7 , 2026
கோவையில் கடந்த ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யபப்ட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படார். ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய சிவகங்கை மாவட்டத்தை சேர்த்த […]
gang rape accused

You May Like