கூகுள் தனது ஜிமெயில் (Gmail) பயனர்களுக்கு 15 ஜிபி இலவச சேமிப்பிடத்தை வழங்குகிறது. ஆனால், இந்த சேமிப்பு Google Drive, Google Photos மற்றும் Gmail ஆகிய மூன்றுக்கும் பகிரப்பட்டதால், தொடர்ந்து வரும் விளம்பர அஞ்சல்கள், ரசீதுகள், செய்திமடல்கள் காரணமாக இன்பாக்ஸ் விரைவில் நிரம்பி விடுகிறது. முக்கியமான மின்னஞ்சல் செய்யும் போது “Storage full” என்ற எச்சரிக்கை வருவது பயனர்களை சிரமப்படுத்துகிறது.
ஒவ்வொரு மெயிலையும் தனித்தனியாக நீக்குவது நேரம் பிடிக்கும். ஆனால், Gmail-இல் இந்த ட்ரிக்கை யூஸ் செய்தால் சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை டெலீட் செய்யலாம்.
ஒரே தேடலில் விளம்பர மின்னஞ்சல்கள் நீக்கம்:
* முதலில் Gmail-ஐ திறந்து Inbox-க்கு செல்லவும்.
* மேலே உள்ள தேடல் பட்டியில் “unsubscribe” எனத் தட்டச்சு செய்து Enter அழுத்தவும்.
* மேலே இடதுபுறத்தில் உள்ள Select All பெட்டியைக் கிளிக் செய்து, குப்பை (Trash) ஐகானை அழுத்தவும்.
* இவ்வாறு செய்வதன் மூலம் அனைத்து விளம்பர மின்னஞ்சல்களையும் ஒரே நேரத்தில் நீக்கலாம்.
அனுப்புநர் அல்லது காலகட்டப்படி மின்னஞ்சல்கள் நீக்குவது:
* பயனர்கள் குறிப்பிட்ட அனுப்புநர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலிருந்து வந்த மின்னஞ்சல்களையும் எளிதில் நீக்கலாம்.
* குறிப்பிட்ட அனுப்புநரிடமிருந்து வரும் அஞ்சலை நீக்க அனுப்புநர் email_address-யை தேடவும்.
* ஒரு நபருக்கு அனுப்பியவை: to:receiver_email_address
* குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்பட்ட அஞ்சல்: to:sender_email_address
உங்கள் தேவைக்கேற்ப மின்னஞ்சல்களை வடிகட்டி, பின்னர் அவற்றை டெலீட் செய்யலாம். முக்கியமான மின்னஞ்சலை தற்செயலாக நீக்கிவிட்டால், பீதி அடைய வேண்டாம். Gmail இல் நீக்கப்பட்ட அனைத்து மின்னஞ்சல்களும் 30 நாட்களுக்கு குப்பைக் கோப்புறையில் இருக்கும். நீங்கள் அவற்றை எளிதாக மீட்டெடுக்கலாம். மொபைல், லேப்டாப், டேப்லெட் அல்லது டெஸ்க்டாப் என எங்கிருந்தும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். உங்கள் Gmail மீண்டும் மீண்டும் நிரம்பினால், இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை நிமிடங்களில் நீக்கி, முக்கியமான மின்னஞ்சல்களுக்கு இடத்தை காலியாக வைத்திருக்கலாம்.
Read more: மூளையைத் தின்னும் அமீபாவால் மேலும் ஒரு பெண் மரணம்.. அச்சத்தில் மக்கள்!