கள்ளக்காதலை கைடுமாறு பலமுறை கண்டித்தும், மனைவி கண்டுகொள்ளாததால் அவரை கொலை செய்துவிட்டு, கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பூம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷில்பா முகர்ஜி. இவருக்கு வயது 34. இவர், அந்த பகுதியில் உள்ள சுகாதார மையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணத்தை மீறிய கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியும், வீட்டிற்கு தெரியாமல் ஊர் சுற்றியும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் ஷில்பாவின் கணவர் சாஹேப் முகர்ஜிக்கு (38) தெரியவந்தது. இதனால், மனைவியை பலமுறை அவர் கண்டித்துள்ளார். ஆனால், இதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த சூழலில், காதலனுடன் தொடர்ந்து மணிக்கணக்கில் ஷில்பா பேசி வந்த நிலையில், சம்பவத்தன்று இரவு கணவன் – மனைவி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கணவர் ஷில்பாவை, அருகில் இருந்த கட்டையால் தலையில் அடித்துள்ளார். பின்னர், கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார். இதையடுத்து, வீட்டில் இருந்து வெளியேறிய சாஹேப் முகர்ஜி, அந்த பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், அவரது மனைவியின் உடலையும் மீட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : சென்னையில் பயங்கரம்..!! உணவக மாஸ்டரின் கழுத்தை அறுத்த 3 சிறுவர்கள்..!! காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்..!!