இந்த வாரம் இவர் தான் எவிக்ட் ஆனாரா? குறும்படம் காட்டி வறுத்தெடுத்த கமல்…!!

இந்த வாரம் ஆரம்பத்தில் இருந்தே சண்டையும் போருமாய் இருந்த பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைகளுக்கும் , சண்டைகளுக்கும் மத்தியில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற கேள்விகளுக்கு மத்தியில் இவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் கொடுத்த டாஸ்கில் செரினா தடுமாறி கீழே விழுந்தது பெரும் புயலை கிளப்பியது. அதற்கு முழு காரணமும் தனலட்சுமி தான் என்று அசீம் உள்ளிட்ட பலரும் கூறி வந்தனர். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று ரசிகர்கள் ஆதாரத்துடன் கண்டுபிடித்து சோசியல் மீடியாவில் பரவ விட்டனர். அதன் மூலம் தனலட்சுமிக்கான ஆதரவும் அதிகரித்தது.


இந்த வாரம் டீசரில் கூட நாம் பார்த்திருப்போம் குறும்படத்தை போட்டு காட்ட வேண்டும் என்று தனலட்சுமியே கேட்டுக் கொண்டார். எதிர்பார்த்தபடி குறும்படம் போட்டு காட்டி கமலஹாசன் அனைவரையும் வறுத்தெடுத்தார். இந்நிலையில் பெண்களை தடவி தடவியே நட்சத்திரமாக இருந்த அசல்தான் வீட்டை விட்டு துரத்தியடிக்கப்பட்டிருக்கின்றார்.

பிக்பாஸ் வீட்டில் பெண்களை தடவுவது , கட்டிப்பிடிப்பது , சில்மிஷம் செய்வது என அசல் பல கோணங்களில் எல்லை மீறி நடந்து கொண்டார். அவர் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மிகவும் மோசமானது. எனவே ரசிகர்களும் அவரை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என கூறினர்.

bigboss asal

அவருக்கான வாக்குகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே இருந்தது. அந்த வகையில் அசல் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இப்படி ரசிகர்கள் இந்த வாரம் முழுவதும் என்ன எதிர்பார்த்தார்களோ அப்படிப்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் தான் இன்றைய நிகழ்ச்சியில் காட்டப்பட இருக்கிறது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு ஆண்டவர் போட்டியாளர்கள் அனைவரையும் நன்றாகவே வெளுத்து வாங்கி இருக்கிறார். அதை கண்குளிர பார்க்கவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Next Post

சூரியன் எரிச்சு தான் பாத்தீங்க !! சிரிச்சு பார்த்திருக்கீங்களா?

Sat Oct 29 , 2022
சூரியன் சிரிப்பது போன்ற படத்தை எடுத்து வெளியிட்டுள்ளது நாசா . அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. பூமிக்கு மிக அருகிலுள்ள விண்மீன் சூரியன். பிளாஸ்மா நிலையில் உள்ள வெப்பமான வாயுக்களை கொண்டதோடு மிகப்பெரிய கோளமாக காணப்படுகின்றது சூரியன் நாம் சுவாசிக்கும் காற்றான ஆக்சிஜன், ஹீலியம் வாயுவுமே இதில் காணப்படும் முக்கிய பிரதான வாயுக்களாகும். சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை 5,500°C க்கும் அதிகமாகும். அது மட்டுமின்றி இதன் மத்திய பகுதியின் […]
coronalhole sdo blank

You May Like