அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கி, ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.. இதுகுறித்து சட்ட நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்? என்று பார்க்கலாம்..
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்..
இந்த நிலையில், அன்புமணியை பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.. 2 முறை நோட்டீஸ் அனுப்பியும் உரிய விளக்கம் அளிக்காததால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.. அன்புமணி உடன் பாமகவினர் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.. கட்சி விதிகளின் படி, ஜனநாயக முறைப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட பின்னரே அன்புமணி நீக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் அன்புமணி பேசுவதெல்லாமே பொய் என்றும், தன்னோடு 40 முறை பேசியதாக அவர் சொன்னது பொய் எனவும் குற்றம்சாட்டினார்.. மேலும் “ யார், யாரை வேவு பார்ப்பது? இதை விட மோசமான செயல் இருக்க முடியுமா? அன்புமணி வேண்டுமானால் தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளாம்.. இரா. என இன்ஷியலை தவிர, ராமதாஸ் என்ற பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது..
அப்பா சொல்லை கேட்டு நடக்க வேண்டும் என மூத்தவர்கள் சொல்லியும் அன்புமணி கேட்கவில்லை.. அவர் தான் தோன்றித்தனமாக செயல்பட்டார். பல்வேறு தரப்பினர் கூறியும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை அன்புமணிக்கு இல்லை. பாமக என்பது நான் தொடங்கிய கட்சி.. நான் ஓடி ஓடி உழைத்து உருவாக்கிய கட்சி.. கஞ்சயோ, கூழோ குடித்து, 96,000 கிராமங்களுக்கு சென்று பாமகவை உருவாக்கி உள்ளேன்.. 46 ஆண்டுகள் பாடுபட்டு வளர்த்த கட்சி அன்புமணியால் அழிகிறதே என்பதால் மனம் பொறுக்கவில்லை.. அதனால் தான் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்..
எனினும் அன்புமணியை நீக்கி, ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.. ஏனெனில் நாங்கள் தான் பாமக என்றும், எங்களை தான் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்று அன்புமணி தரப்பு கூறி வருகிறது.. ஆனால் அன்புமணி செயல் தலைவர் பதவியில் இருந்தும், பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.. இது செல்லுபடியாகுமா? இனி பாமகவின் தலைவர் யார் என்ற கேள்வி எழுகிறது..
பொதுக்குழு என்ன முடிவெடுக்கிறதோ அதை தான் தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றன.. எனவே ஒரு கட்சியின் பொதுக்குழு யாரை தேர்வு செய்கிறதோ, அவர்கள் கட்சியின் அதிகார மையமாக இருப்பார்கள் என்று கூறுகின்றனர்.. எனவே இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்திற்கும் அல்லது நீதிமன்றத்திற்கு செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும்.. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறதோ அது தான் இறுதி முடிவாக இருக்கும் என்று கூறப்படுகிறது..
Read More : BREAKING: பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்.. ராமதாஸ் அதிரடி அறிவிப்பு..!



