ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிக்கிறாரா? உண்மை என்ன?

986955813 jailer 2 srk webp 1

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான கேமியோ ரோலில் நடிக்கிறாரா? உண்மை என்ன?

74 வயதிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். இன்றும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘ஜெயிலர் 2’ உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இந்த படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


ஆனால் உண்மை என்ன? ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிக்கிறாரா? ஷாருக்கான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும், மேலும் அவர் சிறப்பு வேடத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்று படத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இருப்பினும், ஒரு முக்கிய பாலிவுட் நடிகர் இதில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது, ஆனால் அதுகுறித்த அறிவிப்பு பின்னர் தயாரிப்பு குழுவால் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

2023 ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் படமான ‘ஜெயிலர்’ படத்தின் தொடர்ச்சி தான் ஜெயிலர் 2. ஜெயிலர் 1-ல் நடித்த மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் இந்தப் பகுதியில் மீண்டும் நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ‘ஜெயிலர் 2’ படத்தில் நாகார்ஜுனாவுக்கு வில்லன் வேடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

ரஜினிகாந்த் கடைசியாக ‘வேட்டையன்’ படத்தில் நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாக உள்ளது.. இதில் நாகார்ஜுனா, உபேந்திர ராவ், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் மற்றும் சௌபின் ஷாஹிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். மேலு ஆமிர் கான் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : நடிகர் மம்மூட்டியின் உடல் நிலை எப்படி இருக்கு? கேன்சர் வதந்திக்கு மத்தியில் பிரபலம் சொன்ன தகவல்..

RUPA

Next Post

உலகிலேயே அதிக மரண தண்டனை விதிக்கும் நாடு இதுதான்!. ஓராண்டில் சுமார் 1000 பேருக்கு தண்டனை!. ஐ.நா. அதிர்ச்சி ரிப்போர்ட்!

Fri Jun 20 , 2025
ஈரான் கடந்த ஆண்டில் மட்டும் 975 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியிருப்பதாக ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான ஈரானில் உலகிலேயே அதிகளவு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதுகுறித்து ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், அதன் துணை கமிஷனர் நட அல்நாஸிப் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். ஈரானில் கடந்த 2024ல் மொத்தம் 975 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. துாக்கிலிடுவதன் […]
death sentences 11zon

You May Like