பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அண்ணா சிலைக்கு தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் கழக பொருளாளர் எல்.கே.சுதீஸ், கழக துணை செயலாளர் எஸ்.செந்தில்குமார், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ், தெற்கு மாவட்ட செயலாளர் ஆற்.பாரதிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க. 3 கட்சிகளுக்கு தான் பூத் கமிட்டி உள்ளது. திரைத்துறையில் உள்ள உச்ச நட்சத்திரங்களுக்கு மக்கள் கூட்டம் கூடுவது இயல்பான ஒன்று தான். இதை நாங்கள் 1990-களில் இருந்து பார்த்து வருகிறோம். விஜயகாந்துக்கும் இதை விட அதிக அளவிற்கு கூட்டம் கூடியது. இப்போது விஜய்க்கும் மக்கள் கூட்டம் கூடியது.
விஜய் அந்த கூட்டத்தை முறையாக ஒழுங்குப்படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மேலும், விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த கொஞ்ச நாளிலே அதிக வாக்கு சதவீதம் பெற்றவர். அவருடன் வேறு யாரையும் ஒப்பிடவே கூடாது. அவ்வாறு ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம் என கூறினார். தொடர்ந்து விஜய் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விஜய் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் விஜய் தான் பதில் அளிக்க வேண்டும்.
விஜய் குறித்து அவரிடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேள்வி கேட்பது தவறு. இனிமேல் கூட்டணி குறித்தும், விஜய் குறித்தும் என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் என ஏற்கனவே கூறியுள்ளேன். எல்லா கட்சியும் எங்களுடைய நண்பர்கள் தான் கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் எங்களுக்கு நேரம் வேண்டும்” எனக் கூறினார்.
Read more: எச்சரிக்கை.. மூல நோய் உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது..!! மீறினால் ஆபத்து..!