புரட்டாசி மாதம், பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. புதன் பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த மாதத்தில், புதனின் அதிபதியான பெருமாளை வழிபடுவது நம் பாவங்களையும், துன்பங்களையும் நீக்கி நன்மைகளையும், புண்ணியத்தையும் தரும் என நம்பப்படுகிறது.
இந்தாண்டு புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ஆம் தேதியன்று பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த புதன்கிழமை மற்றும் ஏகாதசி திதி ஆகிய மூன்று சிறப்பான தினங்கள் இணைந்து வருவதால், முதல் நாள் வழிபாடே கூடுதல் பலன்களை தரும்.
வழிபாட்டைத் தொடங்குவது எப்படி..?
புரட்டாசி வழிபாட்டை தொடங்குவதற்கு முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்வது நல்லது. புதன்கிழமை காலையில் வீட்டை சுத்தம் செய்து பெருமாளின் படத்தை சுத்தம் செய்து, துளசி மாலை அணிவித்து, சந்தனம் குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும்.
எளிமையாக வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, கற்கண்டு, பால், துளசி தீர்த்தம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். முடிந்தால் பானகம், சுண்டல், வடை, சர்க்கரை பொங்கல் போன்றவைகளையும் படைக்கலாம்.
மேலும், பெருமாளுக்கு உகந்த “ஓம் நமோ நாராயணாய நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபடலாம். விஷ்ணு சஹஸ்ரநாமம் அல்லது நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களைப் பாடியும் வழிபடலாம். இவை எதுவும் தெரியாதவர்கள், எளிமையாக நாராயண மந்திரத்தையும், ராம நாமத்தையும் உச்சரிக்கலாம்.
விரதம் மற்றும் வழிபாடு நேரம் :
இந்த ஆண்டு புரட்டாசி மாதம் புதன்கிழமையில் தொடங்குவதால், வேலைக்கு செல்வோர் காலையிலோ அல்லது மாலையிலோ வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
வழிபாடு துவங்குவதற்கான நேரம் :
காலை 6.00 – 7.20 வரையும், காலை 9.10 – 10.20 வரையும், மாலை 6 மணிக்கு மேல் வழிபாட்டை தொடங்கலாம்.
Read More : கர்ப்பிணி பெண்கள் குலதெய்வ கோயிலுக்கு செல்லலாமா..? எப்படி வழிபட வேண்டும்..? எப்போது செல்ல வேண்டும்..?