தமிழகத்தில் வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. வாக்கு எண்ணிக்கை 4-ம் தேதி நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கும் விஜய்யின் தவெக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது..
அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளரை அறிவித்தார்.. மேலும் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதியில் போட்டியிடுவதாக விஜய் தெரிவித்தார்.. ஆனால் விஜய் தீவிரமாக எதிர்க்கும் திமுகவுக்கு சென்னையிலும், திருச்சி கிழக்கிலும் மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது..
எனவே திமுக பலமாக இருக்கும் இடங்களில் வாக்கு வங்கியை உடைக்க விஜய் வியூகம் வகுத்துள்ளாராம்.. பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளை தேர்ந்தெடுக்க பின்னணி என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது..
இந்த 2 தொகுதிகளிலும் சிறுபான்மையினர் குறிப்பாக கிறிஸ்தவ வாக்குகள் தனக்கு கை கொடுக்கும் என்று விஜய் கருதுகிறாராம்..
திருச்சி கிழக்கு தொகுதியில் 2,03,555 வாக்காளர்கள் இருக்கின்றனர்.. இவர்களில் 36% பேர் சிறுபான்மையின மக்கள் ஆவர்.. இத்தனை ஆண்டுகளாக திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக – அதிமுக என்ற இரு முனைப் போட்டி இருந்த போது வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மை வாக்குகள் தான் இருந்துள்ளது.
ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் வழக்கத்திற்கு மாறாக இந்து சமூக மக்கள் தான் வெற்றியை தீர்மானிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.. திருச்சி கிழக்க் தொகுதியில் கிறிஸ்தவ வெள்ளாளர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர்.. இதுநாள் வரை விஜய் என்று கூறி வந்த விஜய், தன்னை வேட்பாளராக அறிவிக்கும் போது ஜோசப் விஜய் என்று அறிவித்தார்..
எனவே கிறிஸ்தவரான விஜய் மூலம் திருச்சி கிழக்கு தொகுதியில் சிறும்பான்மை வாக்குகள் பிரியும் என்று கூறப்படுகிறது.. ஆனால் எதிர்தரப்பில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் நிறுத்தப்பட்டுள்ளார்.. சிட்டிங் எம்.எல்.ஏவான அவர் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார்.. அவருக்கு கிறிஸ்தவர்கள் ஏகோபித்த ஆதரவு அளித்து வருகின்றனர்.. இதனால் விஜய்க்கு கடும் போட்டியான சூழல் உருவாகும் என்று கூறப்படுகிறது..
எனினும் இளைஞர்கள், பெண்கள் வாக்கு பெரும்பான்மையாக விஜய்க்கு செல்லக்கூடும்.. கிறிஸ்தவர்கள் அல்லாத சமூக மக்கள் திருச்சி கிழக்கில் வெற்றியை தீர்மானிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.. கோனார், முக்குலத்தோர், முத்திரையர், பட்டியலின சமூகத்தினர் வாக்குகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என்றும் கூறப்படுகிறது..
மேலும் உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்து.. கிறிஸ்தவர் என்ற டேக் மட்டும் விஜய்க்கு கை கொடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அனைத்து மக்களை கவரும் வகையில் பிரச்சார யுக்தியை வடிவமைக்க வேண்டும் என்பது முக்கியம் என்று கூறப்படுகிறது. மதம் சார்ந்த மக்களை நம்பி திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட்டாலும் அங்கு வெற்றி பெறுவது எளிதான விஷயம் இல்லை என்பதே கள நிலவரமாக இருக்கிறது.. திருச்சி கிழக்கில் வெல்லப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.. எனினும் இதற்கான பதில் மே 4-ம் தேதி தெரிந்துவிடும்..!
Read More : தேர்தல் பரப்புரைக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு..! காணொளி வாயிலாக பிரச்சாரம் செய்ய விஜய் திட்டம்..?



