மீண்டும் இபிஎஸ் – ஓபிஎஸ் இணைவது உறுதி..? தரமான சம்பவம் செய்யப்போகும் அமித்ஷா..!! நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி..!!

ops nayinar

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அச்சம் தரும் வகையில் அதிகரித்துள்ளதாகவும், மாணவர்கள் கைகளில் புத்தகம் ஏந்த வேண்டிய வயதில் ஆயுதங்களை ஏந்தும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். இது தொடர்பாக தான் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றும், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பாஜக கூட்டணியின் நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


தமிழக அரசின் நிதி நிர்வாகம் மற்றும் நீதி நிர்வாகம் ஆகிய இரண்டுமே சீர்குலைந்துள்ளதாக சாடிய அவர், பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாததை விமர்சித்தார். நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள திமுக அரசு, தனியாரிடம் கடன் வாங்கியாவது மக்களுக்குப் பொங்கல் பணத்தை வழங்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகப் பயணம் குறித்து தெரிவித்த அவர், வரும் 4-ஆம் தேதி திருச்சி வரும் அமித்ஷா, புதுக்கோட்டையில் நடைபெறும் அரசியல் நிகழ்வில் பங்கேற்பார் என்றும், 5-ஆம் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வார் என்றும் கூறினார்.

அதிமுக-வின் உட்கட்சி விவகாரங்கள் குறித்துப் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட விருப்பம் என்றும் இருப்பினும், இது அந்தப் பேரியக்கத்தின் உள் விவகாரம் என்பதால் இறுதி முடிவை அவர்களே எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

Read More : விஜய்யுடன் கூட்டணி வைக்கும் காங்கிரஸ்..? மீண்டும் உடையப்போகிறதா கட்சி..? அரசியலில் புயலை கிளப்பும் ப. சிதம்பரம்..!!

CHELLA

Next Post

FLASH | மீண்டும் அட்டூழியம்..!! தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்த இலங்கை கடற்படை..!! கொந்தளிக்கும் மீனவ குடும்பங்கள்..!!

Fri Jan 2 , 2026
தமிழக மற்றும் புதுவை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில், இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய கைது நடவடிக்கைகள் மற்றும் படகுப் பறிமுதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம்சாட்டி, தமிழக மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்வதுடன், அவற்றைப் பின்னாளில் அந்நாட்டு அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகள் மீனவக் குடும்பங்களை நிலைகுலையச் செய்துள்ளன. குறிப்பாக, கடந்த மாதம் […]
6136430 df 1

You May Like