“என்னை போல் தனி ஆளாக கட்சி ஆரம்பித்து 1 சதவீதம் வாக்கு வாங்கும் தில்லு இருக்கா..?” திமுக, அதிமுகவுக்கு விஜய் பகிரங்க சவால்..!

tvk vijay n 2

சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார்.. அப்போது பேசிய அவர் “ என்னை கிண்டலும், கேலியுமாக பேசுபவர்களுக்கு நான் சொல்கிறேன்.. தமிழ்நாடு தான் என் வீடு.. என் வீட்டில் மொத்தம் 8 கோடி மக்கள் இருக்கின்றனர்.. இந்த மக்களுக்கு இனி எல்லாமுமாக கூட நிற்கப் போவது இனி இந்த விஜய் மட்டும் தான்.. உங்க விஜய், உங்ககிட்ட ஓட்டு கேட்க வரவில்லை.. உங்களிடம் நீதி கேட்டு வந்திருக்கிறேன்..


இந்த விஜய் என்ன தப்பு செய்தான். தன்னை நேசித்த மக்களுக்கு அரசியலுக்கு வந்தான் அது ஒரு தப்பா? மற்ற கட்சிகளுக்கு மாநாடு, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுப்பார்கள்? ஆனால் எனக்கு கொடுக்க மாட்டாங்க.. கொடுக்கவும் விட மாட்டாங்க. இது என்னங்க நியாயம்.. இந்த விஜய் உண்மையானவன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.. உங்களிடம் வந்து நீதி கேட்காமல் வேறு யாரிடம் நான் நீதி கேட்பேன்..

செல்ஃபே எடுக்காத ஒரு கூட்டணி கணக்கு எல்லாம் வேலைக்கே ஆகாது.. இதை ஆணித்தனமாக அடித்து சொல்கிறேன்.. தேர்தலுக்கு பணத்தை கொட்டுவார்கள்.. பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.. அதை வாங்கிக் கொண்டு அவர்களின் காதில் விசிலை ஊதி அனுப்புங்க..” என்று தெரிவித்தார்.. தொடர்ந்து எங்கள் ஓட்டு, எங்கள் உரிமை, எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது.. எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான்.. எங்களை யாரும் ஏமாற்ற முடியாது.. என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்..

மேலும் “ அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியும் என்று சொல்கிறார்கள்.. அதிகாரத்தை வைத்து பணத்தை கொள்ளையடித்ததை தாண்டி வேறு ஏதாவது அனுபவம் இருக்கிறாதா? அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில் அரசியல்வாதிகளாக இருக்கும் ஒரு சவால், என்னை மாதிரி தனி ஆளாக கட்சி ஆரம்பித்து 1 சதவீதம் வாக்கு வாங்கும் தில்லு இருக்கிறதா? திராணி இருக்கிறதா?

இந்த கூட்டணி கட்சிகளை மட்டும் நம்பியிருக்கும் 75 ஆண்டு கட்சி, 50 ஆண்டு கட்சி என இருக்கும் இவர்களை தாண்டி, இன்று 30% மக்களின் ஆதரவை பெற்ற எங்களுக்கு அனுபவம் இல்லையா?

நமக்கு அனுபவம் இல்லை தான்.. கொள்ளை அடிப்பதில் எங்களுக்கு அனுபவம் இல்லை தான்.. அதெல்லாம் எங்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது.. மக்களை நேசிக்கும் நல்ல குணம் இருந்தால் சூப்பரான நல்லாட்சி கொடுக்கலாம்.. மக்கள் சக்தியின் துணையால் நல்ல அதிகாரியின் துணையால் நல்லாட்சி என்னால் கொடுக்க முடியும்.. அதை செய்து காட்டுகிறேன்..” என்று தெரிவித்தார்..

Read More : “தமிழ்நாடு தான் என் வீடு..” ஏ விஜய், பனையூரை விட்டு வெளியே வா என்ற விமர்சனத்திற்கு விஜய் பதில்..!

RUPA

Next Post

“நான் போட்ட பொலிடிக்கல் பாம் எல்லா கூட்டணிகளும் வெடிக்குது.. ஸ்டாலின் சார் பதறுகிறார்..! விஜய் அட்டாக்..!

Fri Feb 13 , 2026
சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார்.. எப்போதும் போல இந்த முறையும் திமுகவை விஜய் கடுமையாக சாடினார்.. அப்போது பேசிய அவர் “ சி.எம். சார் எப்போதும் தமிழ்நாடு டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று சொல்வார்.. ஆனால் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்புகளில் ஸ்டாலின் அவுட் ஆஃப் கண்ட்ரோல்.. தமிழ்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் ஏன் போராட்டம் நடத்துகின்றனர்.. சட்டம் ஒழுங்கு டிஜிபி […]
Vijay Stalin

You May Like