தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டுகளில் பிளஸ் ஒன் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அவர்கள் தேர்ச்சி பெரும் வரை தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது.. அதன்படி, நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறை ரத்து செய்யப்படுவது அறிவிக்கப்பட்டது. 10,12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடக்கும் என கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.. அதே போல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் கட்டாய தேர்ச்சி முறை தொடரும்.. இரு மொழிக் கொள்கையே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் முந்தைய கல்வி ஆண்டுகளில் பிளஸ் ஒன் தேர்வு எழுதி ஏராளமானவர்கள் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இதனால் அவர்கள் அனைவருக்கும் இந்த உத்தரவு பொருந்துமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ள நிலையில், தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேர்ச்சி பெறும் வரை தேர்வு தொடர்ந்து நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை மாணவர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசின் மாநில கல்வொல் கொள்கையில், நீட் தேர்வு கூடாது, கல்வி மாநில பட்டியலுக்கு வர வேண்டும், தொடக்க நிலை முதல் உயர்கல்வி வரை தமிழ் தான் முதன்மை மொழி, ஒவ்வொரு கல்லூரியிலும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more: விவசாயிகளுக்கு ரூ.3000 வழங்கும் தமிழக அரசின் சூப்பர் திட்டம்…! எங்கு சென்று விண்ணப்பிப்பது…?