இதுக்கு ஒரு எண்டே இல்லையா? தங்கம் விலை இன்றும் தாறுமாறு உயர்வு.. வெள்ளி விலையும் புதிய உச்சம்..!

360 F 612420676 Az3c9EUa7JNa5ShgNII8DGt4XNEOtqv4 1

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ.85,600க்கு விற்பனை செய்யப்படுகிறது..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் கடந்த வாரத்தின் தொடக்கத்திலும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.. இதனால் தங்கம் விலை ரூ.85,000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது..

இந்த நிலையில் இன்றும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ரூ.10,700க்கு விற்பனையானது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ. 85,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 உயர்ந்து, ரூ.160 க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,60,000 விற்பனையாகிறது.

Read More : இனி அனைவருமே கார் வாங்கலாம்..!! மாதம் ரூ.1,999 செலுத்தினால் போதும்..!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மாருதி..!!

English Summary

Gold prices today rose by Rs. 480 per sovereign and are being sold at Rs. 85,600.

RUPA

Next Post

இந்தியன் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு.. ரூ.1,20,940 வரை சம்பளம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

Mon Sep 29 , 2025
Job opportunities are pouring in at Indian Bank.. Salary up to Rs.1,20,940.. Don't miss it..!!
bank job 1

You May Like