இதுக்கு எண்டே இல்லையா? இன்றும் தங்கம் விலை தாறுமாறு உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

gold coins gold jewellery floor background 181203 24090 1

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் ரூ.1,800 உயர்ந்தது..

இந்த நிலையில் தங்கம் விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது.. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.70 அதிகரித்து, ரூ.9470க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.75,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ.127-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,27,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : தக்காளி விலை திடீர் உயர்வு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? – இல்லத்தரசிகள் அதிர்ச்சி

RUPA

Next Post

இபி மீட்டர் மாறுது.. தமிழ்நாட்டில் மாதாந்திர மின் கட்டண முறை மீண்டும் அமல்..? அரசின் மாஸ்டர் பிளான் 

Fri Aug 8 , 2025
The government is considering bringing back the monthly electricity bill system, one of the DMK's election promises.
EB Bill 2025

You May Like