கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய இப்படி ஒரு ஈஸியான வழி இருக்கா..? மக்களே தெரிஞ்சிக்கோங்க..!!

இன்றைய காலகட்டத்தில் அன்றாட பொருட்கள் வாங்குவது முதல் பண பரிவர்த்தனைகள் வரை அனைத்தையும் கையில் இருக்கும் ஒரு செல்போன் மூலம் இணையதளத்திலேயே மக்கள் முடித்து விடுகிறார்கள். இந்நிலையில், தற்போது வாட்ஸ் அப்பில் கேஸ் முன்பதிவு எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். அதன்படி Indane, Bharth petroleum, HP GAS வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் மூலமாக கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.


Indane கேஸ் வாடிக்கையாளர்கள் செல்போனில் 75888 88824 என்ற நம்பரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், வாட்ஸ் அப்பில் அந்த எண்ணுக்கு Book அல்லது Refill என டைப் செய்து அனுப்ப வேண்டும். இதன் மூலம் கேஸ் சிலிண்டர் புக்கிங் ஆகிவிடும். இதேபோன்று HP கேஸ் வாடிக்கையாளர்கள்‌ 92222 01122 என்ற நம்பரை சேமித்து வைத்துக் கொண்டு Book அல்லது Hi என மெசேஜ் அனுப்ப வேண்டும். அதன் பிறகு கேஸ் சிலிண்டர் புக்கிங் ஆகிவிடும். இதே போன்று பாரத் பெட்ரோலியம் கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய 18002 24344 என்ற எண்ணிற்கு Hi என மெசேஜ் அனுப்ப வேண்டும்.

CHELLA

Next Post

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? தினமும் ஃபாலோ பண்ணுங்க..!!

Thu Apr 13 , 2023
காலையில் எழுந்ததும் பல் துலக்கிய கையுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இதனால் உங்கள் உடலுக்காக நீங்கள் காலையில் செய்யும் முதல் நன்மை இதுவாகத்தான் இருக்கும். அப்படி என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி: காலை எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் நிணநீர் ஆற்றல் பெறுகின்றன. இதனால் நோய் தொற்றுகளை தாக்கும் ஆற்றலை உடல் பெறுகிறது. மேலும், […]
Drinking water in the morning

You May Like