தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சிம்ரன். இவர் விஜய், அஜித், கமல், ரஜினி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த மகான், கேப்டன், ராக்கெட்ரி ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் தற்போது அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி என பல படங்களை கைவசம் வைத்துள்ளார் சிம்ரன்.

நடிகை சிம்ரன் கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், அடிக்கடி தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை கூட இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வார் சிம்ரன். இந்நிலையில், நடிகை சிம்ரனின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.