இந்தியாவின் முன்னணி ஹோட்டல் நிறுவனமாக விளங்கும் OYO ரூம்ஸ் இன்று உலகளவில் ஆயிரக்கணக்கான ஹோட்டல்களை இயக்கி வருகிறது. இந்த நிறுவனம் 2012-ஆம் ஆண்டு ரித்தேஷ் அகர்வால் என்பவரால் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் Oravel Stays என்ற பெயரில் நிறுவனம் அறிமுகமானது. பின்னர் 2013-ஆம் ஆண்டு, பேபால் நிறுவனத்தின் இணை நிறுவனர் பீட்டர் தியேல் வழங்கிய $100,000 ‘Thiel Fellowship’ மானியம் கிடைத்ததைத் தொடர்ந்து, நிறுவனத்தின் பெயர் OYO என மாற்றப்பட்டது.
குருகிராம் வெறும் 5 ஹோட்டல்களுடன் ஆரம்பித்த இந்த நிறுவனம், இன்று உலகின் பல்வேறு நாடுகளில் தங்குமிட வசதிகளை வழங்கி வருகிறது. பலருக்கு OYOவின் முழுப் பெயர் தெரியாது. OYO என்பது On Your Own என்பதன் சுருக்கமாகும். அதாவது, வாடிக்கையாளர்கள் தங்கும் அறையை தங்கள் சொந்த அறை போல உணர வேண்டும் என்பதற்காகவே இந்த பெயர் வைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் சிறியதாக இருந்த இந்த நிறுவனம், பின்னர் வேகமாக வளர்ந்து, உலகின் முன்னணி முதலீட்டாளர்களின் கவனத்தையும் ஈர்த்தது. SoftBank Group, Airbnb, Sequoia India, Lightspeed India போன்ற நிறுவனங்கள் OYO-வில் பெருமளவு முதலீடு செய்துள்ளன.
நிறுவனர் ரித்தேஷ் அகர்வால்: OYO நிறுவன Founder ஆன ரித்தேஷ் அகர்வால் 1993 நவம்பர் 16ஆம் தேதி ஒடிசா மாநிலம் பிஸ்ஸாம் கட்டாக் பகுதியில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே வணிகத்துறையில் ஆர்வம் கொண்ட அவர், வெறும் 19 வயதிலேயே OYO-வை தொடங்கினார்.
Hurun India Rich List 2024 படி, அவர் இந்தியாவின் முதல் 10 இளம் பில்லியனர்களில் ஒருவராக உள்ளார். ரித்தேஷ் சுமார் ₹1,900 கோடி ($225 மில்லியன்) நிகர சொத்து மதிப்பு கொண்டவராக மதிக்கப்படுகிறார். OYOவுடன் மட்டுமல்லாமல், Unacademy, Cars24, Zing Bus, Taffy Kids போன்ற பல Startups-களிலும் அவர் முதலீடு செய்துள்ளார்.
Read more: ATM-ல் பணம் வராமல்.. அக்கவுண்டில் பணம் டெபிட் ஆனால் என்ன செய்ய வேண்டும்..? RBI ரூல்ஸ் இதுதான்..



