தமிழ் சினிமாவில் 80களில் வெளிவந்த ஹிட் படங்களையும், அதில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தவர்களையும் மக்களால் மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு அப்போது இருந்த படங்கள், கதாபாத்திரங்கள் தரமாக இருந்தன. அந்தவகையில், பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படத்தில் கிளாமரான டீச்சராக நடித்து கலக்கியவர் தான் தீபா. இவர் 1975இல் கமல்ஹாசன் நடித்த அந்தரங்கம் என்ற படம் மூலம் அறிமுகமாகி உல்லாச பறவைகள், ஜானி உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

1982ஆம் ஆண்டு கல்லூரி பேராசிரியல் ரிஜாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மட்டும் இருக்கிறார். அவருக்கு திருமணம் ஆகி இப்போது ஒரு குழந்தையும் உள்ளது. நடிகை தீபா தனது மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தையுடன் எடுத்த போட்டோ வெளியாக அட நம்ம டீச்சரா இது வயதாகி ஆளே மாறிட்டாங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.