அண்ணா சீரியல் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளா..? யாருக்கு அதிகம்..?

anna serial2

ஜீ தமிழ் தொலைக்காட்சி பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோக்களையும், வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட தொடர்களையும் ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் துர்கா சரவணன் இயக்கத்தில் கடந்த மே 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் தான் அண்ணா. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு அண்ணா சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.


மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ள இந்த சீரியல் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது. மேலும் இந்த தொடரில் செந்திலின் தங்கைகளாக பூவிலங்கு மோகன், ப்ரீதா சுரேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், சூப்பர்ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு நடிகர் நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 28,000 சம்பளமாக மிர்ச்சி செந்தில் வாங்கி வருகிறார் எனக் கூறப்படுகிறது.

இதில் பரணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நித்யா ராமின் ஒரு நாள் சம்பளம் 25 ஆயிரம் ரூபாய். அதே சீரியலில், இசக்சி ரோலில் நடித்து வரும் ப்ரீதா சுரேஷின் ஒரு நாள் சம்பளம் 12 ஆயிரம், ரத்னா வேடத்தில் நடித்து வரும் சுனிதா ஒரு நாளைக்கு 12 ஆயிரம் ரூபாயும், வீரா வேடத்தில் நடித்து வரும் சுசித்ராவிற்கு 10 ஆயிரமும், செல்ல கனி வேடத்தில நடித்து வரும் ஹேமா சின்ராஜூக்கு 6 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

Read more: பயிற்சியுடன் ரூ.14,000 ஊக்கத்தொகை வழங்கும் தமிழ்நாடு அரசு..!! செப்.10ஆம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

English Summary

Is this the only daily salary of Anna serial celebrities? Who gets more?

Next Post

உங்களுக்கு கொரியன் ஸ்கின் வேண்டுமா..? இந்த ஒரு பொருள் செய்யும் மயாஜாலம்..!! தினமும் இப்படி பயன்படுத்துங்க..!!

Tue Sep 2 , 2025
நம்மில் பலருக்கும் “பார்லி” என்றால் உடல் எடை குறைக்கும் உணவாகவே தெரியும். ஆனால், அது உங்கள் சரும பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெரியுமா..? மிதமான சுவை, வெண்மை நிறம், மென்மையான அமைப்பு இவை எல்லாம் பார்லியின் அடையாளங்கள். ஆனால், அதன் தோலுக்குள்ளேயே மறைந்திருக்கிறது ஒரு சக்திவாய்ந்த அழகு ரகசியம். சமையலறையில் சாதம் பதிலாக இடம் பிடித்த பார்லி, இப்போது உங்கள் ஃபேஸ்வாஷ், டோனர், பேஸ்மாஸ்க் மற்றும் ஹைட்ரேட்டிங் […]
Face 2025

You May Like