தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் தீவிரமாக உள்கட்சி கட்டமைப்பை பலப்படுத்தி வருவதுடன், வரவிருக்கும் தேர்தலுக்கான பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில், அக்கட்சியின் தேர்தல் சின்னம் குறித்த எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் அதிகரித்துள்ளது. த.வெ.க.வின் சின்னமாக ‘விசில்’, ‘பேட்’, ‘வெற்றிக் கோப்பை’ அல்லது ‘மோதிரம்’ போன்ற பல சின்னங்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், த.வெ.க.வின் தேர்தல் சின்னம் பற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முக்கியத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த 15 நிமிடங்களுக்குள், அது உலகப் புகழ் பெறும்” என்று தெரிவித்துள்ளார்.
பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இப்படி அதிரடியான ஒரு உத்தரவாதத்தை கொடுத்திருப்பதால், அந்தக் கட்சியின் சின்னம் என்னவாக இருக்கும்? அப்படி என்ன தனித்தன்மை வாய்ந்த ஒன்றாக அது இருக்கும்? என்று தமிழக அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஆச்சரியமும் கேள்வியும் எழுந்துள்ளது. த.வெ.க.வின் தேர்தல் சின்னம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
Read More : தமிழக மக்களுக்கு ஜாக்பாட் செய்தி..!! பொங்கல் பரிசுத் தொகை ரூ.5,000..? வெளியான அதிரடி அறிவிப்பு..!!



