முன்னாள் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரியும் டேட்டிங் செய்வதாகக் கூறப்படும் நிலையில், இருவரும் அரைகுறை ஆடையுடன் முத்தமிடும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரிக்கும் இடையே காதல் இருப்பதாக மீண்டும் வதந்திகள் பரவி வருகின்றன. இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. ட்ரூடோவும் பெர்ரியும் சமீபத்தில் ஒரு படகில் காணப்பட்டனர். டெய்லி மெயில் செய்தியின்படி, அவர்கள் கலிபோர்னியாவின் சாண்டா பார்பரா கடற்கரையில் அதிக நேரம் செலவிட்டனர். இதுதொடர்பான ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, இது ட்ரூடோவும் பெர்ரியும் முத்தமிடுவதைக் காட்டுகிறது என்று கூறப்படுகிறது.
18 ஆண்டுகள் ஒன்றாக இருந்த பிறகு 2023 ஆம் ஆண்டு ட்ரூடோ தனது மனைவி சோஃபியை விவாகரத்து செய்தார். இந்த ஆண்டு நடிகர் ஆர்லாண்டோ ப்ளூமுடன் கேட்டி பெர்ரியும் பிரிந்தார். பெர்ரி பிரிந்த சிறிது நேரத்திலேயே ட்ரூடோவுடனான காதல் பற்றிய வதந்திகள் பரவத் தொடங்கின. இந்த ஆண்டு ஜூலை மாதம் ட்ரூடோவும் பெர்ரியும் ஒன்றாகக் காணப்பட்டனர். TMZ அறிக்கையின்படி, இருவரும் கனடாவின் மாண்ட்ரீலில் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவிற்குச் சென்றனர். இதனை தொடர்ந்து இருவரும் கடற்கரையில் படகில் முத்துமிடும் வீடியோ வெளியாகியுள்ளது.
பிரதமராக இருந்தபோது, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டிற்காக ட்ரூடோ பரவலாக விமர்சிக்கப்பட்டார். காலிஸ்தானி ஆதரவாளர்களுக்கு எதிராக மென்மையான நிலைப்பாட்டை எடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ட்ரூடோவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மோசமாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: கிரிப்டோ சந்தை வீழ்ச்சி!. 32 வயதான பிரபல முதலீட்டாளர் தற்கொலை!. சோகமான முடிவு!