தவெக புதிய எதிரியா? விஜய் குறித்து ஒரே வார்த்தையில் முதல்வர் ஸ்டாலின் சொன்ன ‘நச்’ பதில்..!

Stalin vs Vijay 2026

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது அரசியல் களத்தில் நுழைந்துள்ள புதிய எதிரிகள் என தவெக தலைவர் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், யாரையும் நான் எதிரியாக பார்க்கவில்லை என்று தெரிவித்தார்..


மேலும் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குழு விரைவில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த விரைவில் குழு அமைக்கப்படும் என்று கூறினார்.

தவெக கட்சி தொடங்கியது முதலே திமுகவை அரசியல் எதிரி என்று பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி வருகிறார்.. ஆனால் கொள்கை எதிரியான பாஜகவை பெரிதாக விமர்சிக்காத விஜய், ஆரம்பத்தில் இருந்தே விஜய் திமுகவை மட்டுமே விமர்சித்து வருகிறார்.. நேற்று நடந்த தவெக 3-ம் ஆண்டு விழாவில் பேசிய போது கூட விஜய் தீய சக்தி திமுகவை தவெக என்ற தூய சக்தியால் மட்டுமே வீழ்த்த முடியும் என்று கூறியிருந்தார்.. மேலும் இந்த தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும் போட்டி எனவும், அதில் திமுகவை வீழ்த்தி தவெக ஆட்சி அமைக்கும் என்று விஜய் கூறியிருந்தார்..

எனினும் விஜய்யின் இந்த விமர்சனங்களுக்கு திமுகவினர் பெரிதாக பதிலடி கொடுப்பதில்லை.. இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் விஜய் பேச்சுக்கு பதிலளித்து வருகின்றனர்.. அதுவும் பெரியளவில் விமர்சிப்பதில்லை.. கரூர் துயர சம்பவத்தில் தவெக திமுக அரசு மீது குற்றம்சாட்டினார்.. ஆனால் எந்த கட்சி தலைவர் தன் தொண்டர் உயிரிழக்க வேண்டும் என்று விரும்பமாட்டார் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : Flash : தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை திடீர் விலகல்..! இதுதான் காரணம்..! அவரே சொன்ன தகவல்..!

RUPA

Next Post

தரவுப் பகிர்வு என்ற பெயரில் குடிமக்களின் தனியுரிமையுடன் விளையாட முடியாது : வாட்ஸ்அப், மெட்டா நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை.!

Tue Feb 3 , 2026
தரவுப் பகிர்வு என்ற பெயரில் குடிமக்களின் தனியுரிமை உரிமையை சமரசம் செய்ய முடியாது என்று வாட்ஸ்அப் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டாவிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. வாட்ஸ்அப் மற்றும் மெட்டா தாக்கல் செய்த மனுக்களை விசாரித்தபோது உச்ச நீதிமன்றம் இந்த கருத்துகளை தெரிவித்தது… விசாரணையின் போது, ​​மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை (MeitY) இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு தரப்பாகச் சேர்த்தது. இந்த விவகாரத்தில் பிப்ரவரி […]
whatsapp 2026 1

You May Like