2026 தேர்தலில் தவெக இந்த சின்னத்தில்தான் போட்டியிட போகுதா..? டிக் செய்த விஜய்..! தொண்டர்கள் குஷி..

24 67208f1b7fd84

கடந்த 27ஆம் தேதி கரூருக்கு பிரச்சாரத்திற்கு சென்ற விஜயை பார்க்க வந்தவர்களில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூரில் விஜய் பார்க்க வந்தவர்கள் துடிதுடித்து உயிரிழந்து கொண்டிருக்க, விஜயோ களத்தில் நிற்காமல் சென்னை வந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. கரூர் சம்பவம் அந்த கட்சிக்கு பெரும் கரும்புள்ளியாக மாறியது.


இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலான்யவு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த குழு தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்புகள் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் பின்னடைவாக மாறியது.

தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் தேர்தல் ஆணையத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்டாலும் அங்கீகரிக்கப்படாத கட்சி என தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் அரசியல் வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழக வெற்றிக்கழகம் தனது கட்சிக்கான அதிகாரப்பூர்வ சின்னத்தை பெறுவதில் வேகம் எடுத்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத கட்சிகள் நவம்பர் 11 முதல் சின்னத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் விஜய் இளைஞர் மற்றும் பெண்களை கவரும் சின்னங்கள் மீது கவனம் செலுத்தி 5 விருப்ப சின்னங்களை தேர்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட 184 ஒதுக்கப்படாத சின்னங்களில், குறைந்தது ஐந்து முதல் பத்து சின்னங்களை தேர்வு செய்து இந்த விண்ணப்பங்கள் தரப்பட வேண்டும். இப்படியான சூழ்நிலையில்தான் மகளிர் மற்றும் இளைஞர்களை கவரக்கூடிய விதமாகவும், எளிதாக மனதில் நிற்கும் விதமாகவும் ஐந்து சின்னங்களில் கப்பல், விசில், ஆட்டோ உள்ளிட்ட சின்னங்களை விஜய் தேர்வு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் விசில் சின்னம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்ததால், அதையே தவெக கேட்டு பெறும் வாய்ப்பு அதிகம். கட்சித் தரப்பில் இது மக்களிடம் எளிதாகப் பரவக் கூடிய சின்னம் என கருதப்படுகிறது. நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கவும் ஆயத்தமாகிவிட்டதாக பனையூர் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. கரூர் சம்பவத்தால் முடங்கிய தவெக அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருவது தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more: தினமும் இந்த ஜூஸ்களை குடித்தால் உடல் எடை கிடுகிடுன்னு குறையுமாம்..!! இன்னைக்கே குடிங்க..

English Summary

Is TVK going to contest the 2026 elections with this symbol? Vijay who ticked it! Volunteers are happy..

Next Post

சென்னையில் தீவிரமாக பரவும் டெங்கு..!! எந்த ஏரியாவில் அதிகம் தெரியுமா..? நாளுக்கு நாள் எண்ணிக்கை உயர்வதால் பீதி..!

Sun Oct 26 , 2025
தமிழ்நாட்டில் தற்போது ஆங்காங்கே பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிவேகமாகப் பரவி வருகிறது. முன்பு தினசரி பாதிப்பு 10 ஆக இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை உயர்ந்து 60-ஐ கடந்துள்ளது. பருவமழைக் காலத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்து வரவிருக்கும் இரண்டு மாதங்களில் இந்த நோய்த்தொற்று பாதிப்பு மேலும் இருமடங்காக உயரக்கூடும் என்று பொது சுகாதார வல்லுநர்கள் […]
Dengue 2025

You May Like