நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கொளத்தூர் தொகுதியில் மேற்கொண்டு வரும் அதிரடி களப்பணிகள், ஆளும் திமுக தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒரு கட்சியின் தலைவராகவும், முதல்வராகவும் ஸ்டாலின் பலமுறை வெற்றி பெற்ற தொகுதியிலேயே, அவருக்கு நேரடி சவாலை உருவாக்கும் விஜய்யின் இந்த வியூகம் அரசியல் விமர்சகர்களிடையே உற்றுநோக்கப்படுகிறது.
குறிப்பாக, கரூர் சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசுக்கும் தவெக-விற்கும் இடையே நிலவும் மோதல் போக்கு, கொளத்தூரில் இன்னும் வீரியமடைந்துள்ளது. ஆளும் தரப்பிலிருந்து வரும் அரசியல் தடைகளையும் மீறி, விஜய் தனது தொண்டர்கள் மூலம் தொகுதி முழுவதும் மக்கள் நலத்திட்டங்களை முடுக்கிவிட்டுள்ளார். இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே விஜய்க்கு ஏற்பட்டுள்ள எழுச்சி, முதல்வரின் சொந்த தொகுதியிலேயே அவருக்கு நெருக்கடியை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. தனது தொகுதியை தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு முதல்வர் தள்ளப்பட்டுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு, கோட்டையிலேயே ஓட்டை போடும் வியூகத்தை தவெக கையில் எடுத்துள்ளது. முதலமைச்சரின் பலத்தை அவரது சொந்த தொகுதியிலேயே சோதிப்பதன் மூலம், தமிழகம் முழுவதும் ஒரு வலுவான அரசியல் செய்தியை சொல்ல விஜய் திட்டமிட்டுள்ளார். ஸ்டாலின் Vs விஜய் என உருவெடுத்துள்ள இந்த நேரடி மோதல், கொளத்தூர் தொகுதியை தமிழகத்தின் மிக முக்கிய விஐபி போர்க்களமாக மாற்றியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
Read More : நிஃபா வைரஸ் எதிரொலி..!! மக்களே இந்த பழங்களை சாப்பிடாதீங்க..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு உத்தரவு..!!



