ஸ்க்விட் கேம் பார்த்தது ஒரு குத்தமா? குழந்தைகளை பொதுவெளியில் தூக்கிலிட்ட வடகொரியா..! பதற வைக்கும் தகவல்கள்..!

kim jong un

உலகில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் விதிகள் கொண்ட நாடாக வடகொரியா உள்ளது.. கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி அந்நாட்டில் நடந்து வருகிறது.. வட கொரியாவில் மக்கள் இணையத்தைப் பயன்படுத்த முடியாது, வெளியுலகத் தொடர்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. வட கொரிய மக்கள் அரசு ஊடகங்களை மட்டுமே பார்க்க முடியும். குடிமக்கள் நாட்டிற்குள் செல்லவும் வெளியேறவும் கடுமையான அனுமதி பெற வேண்டும், வெளிநாடு செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சிகை அலங்காரம், உடைகள் போன்றவற்றுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வட கொரியாவில் வெளிநாடு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்உம் தடை உள்ளது.


இந்த நிலையில் வடகொரியாவில் தென் கொரிய தொலைக்காட்சி தொடர்கள் பார்ப்பதும், கே-பாப் இசை கேட்பதும் போன்ற காரணங்களுக்காக குழந்தைகள் உட்பட பொதுமக்களை பொதுவெளியில் தூக்கிலிடும் சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள புதிய சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

அம்னஸ்டி இன்டர்நேஷனல் சேகரித்துள்ள இந்த சாட்சியங்களில், வடகொரியாவிலிருந்து தப்பி வெளியேறியவர்கள், உலகளவில் பிரபலமான தென் கொரிய ஊடகங்கள் மற்றும் பாப் கலாச்சாரத்தைப் பயன்படுத்துவது தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பப்படுதல், பொதுவெளியில் அவமதிப்பு, அல்லது மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளனர்.

தப்பியோடியவர்கள், வடகொரியாவில் தென் கொரிய கலாச்சாரம் ஒரு மிகக் கடுமையான குற்றமாக கருதப்படுவதாகவும், பயத்தின் சூழலில் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், பணம் உள்ள குடும்பங்கள் சில சமயங்களில் ஊழல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மாணவர்கள் கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு தூக்குத் தண்டனைகள்

பலர், தாங்கள் பள்ளி மாணவர்களாக இருந்தபோது, ‘சிந்தனைப் பயிற்சி’ (Ideological Education) என்ற பெயரில் பொதுத் தூக்குத் தண்டனைகளைப் பார்க்க கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளனர். சோய் சுவின் என்பவர், 2017 அல்லது 2018-ஆம் ஆண்டு சினுய்ஜு நகரில், வெளிநாட்டு ஊடகங்களை விநியோகித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை பொதுவெளியில் தூக்கிலிட்ட சம்பவத்தை நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

“அனைவரும் வர வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர். சினுய்ஜு நகரத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். மக்களை மனதளவில் கட்டுப்படுத்தவும், பயமுறுத்தவும் இவ்வாறு தூக்கிலிடுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

கிம் இயூன்ஜு (40) என்பவர், “நாங்கள் 16, 17 வயதில், நடுநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, தூக்குத் தண்டனைகளை பார்க்க அழைத்துச் சென்றார்கள். அனைத்தையும் காட்டினார்கள். தென் கொரிய ஊடகங்களை பார்த்ததற்காகவும், பகிர்ந்ததற்காகவும் மக்கள் தூக்கிலிடப்பட்டனர். ‘நீங்களும் பார்த்தால் இதுதான் நடக்கும்’ என்பதைக் கற்றுக் கொடுக்கும் கல்வி இது,” என்று தெரிவித்துள்ளார்.

‘ஸ்க்விட் கேம்’ பார்த்ததற்கும் மரணம்?

தப்பியோடியவர்கள், சமீப ஆண்டுகளில் புதிய தென் கொரிய தொடர்கள், முன்பைவிட வேகமாக வடகொரியாவிற்குள் நுழைவதாக கூறியுள்ளனர். 2010-களில் வெளியான Crash Landing on You (வடகொரியா பின்னணியில் அமைந்த தொடர்) மற்றும் Descendants of the Sun போன்ற பிரபல தொடர்கள் அங்கு பரவியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மற்றொரு நபர் “ யாங்காங்க் மாகாணத்தில் குடும்பத் தொடர்புகள் கொண்ட ஒருவர் கூறிய தகவலை மேற்கோள் காட்டி, ‘Squid Game’ தொடர் பார்த்ததற்காக உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் தூக்கிலிடப்பட்டனர் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, Radio Free Asia 2021-ஆம் ஆண்டு வட ஹாம்க்யாங் மாகாணத்தில் அந்த தொடரை விநியோகித்ததற்காக ஒருவரை தூக்கிலிட்டதாக தனியாக பதிவு செய்துள்ளது.

கே-பாப் இசைக்கும் கட்டுப்பாடு

தென் கொரிய பாப் இசை கேட்பதும் அதிகாரிகளின் கடும் கண்காணிப்பில் உள்ளது.
BTS போன்ற கே-பாப் குழுக்களின் பாடல்கள் குறிப்பாக இலக்காக இருப்பதாக தப்பியோடியவர்கள் கூறியுள்ளனர். 2021-ஆம் ஆண்டு, The Korea Times, BTS பாடல்கள் கேட்டதாக பிடிபட்ட வடகொரிய இளைஞர்கள் தண்டிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது.

அம்னஸ்டியின் ஆய்வு

அம்னஸ்டி இன்டர்நேஷனல், 2025-ஆம் ஆண்டு 25 வடகொரிய தப்பியோடியவர்களுடன் ஆழமான நேர்காணல்கள் நடத்தியுள்ளது. இதில், 2019–2020 இடையே 11 பேர் நாட்டை விட்டு வெளியேறினர்.. பெரும்பாலானோர் தப்பிய நேரத்தில் 15 முதல் 25 வயதுக்குள் இருந்தவர்கள்.

கடும் தகவல் கட்டுப்பாடு சட்டங்கள்

வடகொரியா உலகின் மிகக் கடுமையான தகவல் கட்டுப்பாடு கொண்ட நாடுகளில் ஒன்றாகும். 2020-ஆம் ஆண்டு அமலுக்கு வந்த பிற்போக்கு எதிர்ப்பு சிந்தனை மற்றும் கலாச்சாரச் சட்டத்தின் படி, தென் கொரிய தொடர்கள், திரைப்படங்கள், இசையை பார்ப்பதற்கோ வைத்திருப்பதற்கோ 5 முதல் 15 ஆண்டுகள் கட்டாயத் தொழிலாளர் தண்டனை, அதிக அளவில் விநியோகித்தால் அல்லது குழுவாகக் காட்டினால் மரண தண்டனை வரை விதிக்க முடியும்.

தென் கொரிய எல்லைக்கு அப்பால் வசிக்கும் வடகொரிய தப்பியோடியவர்கள், அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள், கே-பாப் இசை மற்றும் வீடியோக்கள் கொண்ட USB மெமரி ஸ்டிக்குகள் ஆகியவற்றை பலூன்கள் மூலம் வடகொரியாவிற்கு அனுப்பி வருகின்றனர்.

அம்னஸ்டி இன்டர்நேஷனலின் துணை பிராந்திய இயக்குநர் சாரா ப்ரூக்ஸ் கூறுகையில், “இந்த சாட்சியங்கள், ஒரு தென் கொரிய டிவி தொடரைப் பார்ப்பதே உயிரைக் கொல்லும் அளவுக்கு ஆபத்தானதாக இருக்கும் சட்டங்களை வடகொரியா அமல்படுத்துகிறது என்பதை காட்டுகின்றன.. பணம் கொடுத்து தப்பிக்க முடியாவிட்டால்,” என்றார்.

“சர்வதேச சட்டங்களுக்கு எதிராக தகவல்களை அணுகுவதை குற்றமாக்கி, அதே நேரத்தில் அதிகாரிகள் லஞ்சம் வாங்க அனுமதிக்கப்படுகிறது. இது அடக்குமுறையும் ஊழலும் இணைந்த ஒரு அமைப்பு. இதில் அதிகமாக பாதிக்கப்படுவது ஏழைகள்தான்,” என்றும் அவர் கூறினார்.

“இந்த அரசின் தகவல் பற்றிய பயம், முழு மக்களையும் ஒரு சிந்தனைச் சிறையில் அடைத்துள்ளது. வெளி உலகைப் பற்றி அறிய முயல்வோரும், சாதாரண பொழுதுபோக்கை நாடுவோரும் கடுமையான தண்டனைகளை சந்திக்கிறார்கள்.. பயம் மற்றும் ஊழலை அடிப்படையாகக் கொண்ட இந்த முற்றிலும் தன்னிச்சையான அமைப்பு, அடிப்படை நீதியையும் சர்வதேச மனித உரிமைகளையும் மீறுகிறது. இது உடனடியாக அகற்றப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார்.

Read More : ரூ.100, 200 நோட்டுகளில் உள்ள இந்த கோடுகளுக்கு என்ன அர்த்தம்..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..!

RUPA

Next Post

பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் அற்புதமான ஜப்பானிய ரகசியம்..! 15 நிமிடங்கள் இதை செய்தால் போதும்.!

Wed Feb 4 , 2026
வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இளம் வயதிலேயே மக்கள் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். பக்கவாதம் என்பது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் திடீரென நின்றுபோவதாகும். இதயம் ஆரோக்கியமாக இல்லாவிட்டாலும், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், நீரிழிவு, புகைப்பிடித்தல் மற்றும் அதிக எடை ஆகியவை பக்கவாதத்திற்கு முக்கிய காரணங்களாக […]
winter brain stroke

You May Like