பெருவாரியானப் பெண்கள் முகத்திற்கு மட்டுமே அதிக அளவில் சரும பராமரிப்பு வேலைகள் செய்கின்றனர். நிறைய பெண்கள் தங்களது கழுத்தை பராமரிக்க மறந்துவிடுகின்றனர். முகத்தை விட அதிகமாய் கழுத்தில் தான் நிறைய வியர்வை தங்குகிறது, மற்றும் நகை, அணிகலன் அணியும் போது நிறைய சரும பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, முகத்தை காட்டிலும் கழுத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கழுத்து அழகாக இருப்பதும் அவசியம். சிலரது முகம் பளபளப்பாய் டாலடிக்கும். ஆனால் கழுத்தைச் சுற்றி இருக்கும் கருமை மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடும். கழுத்தின் கருமையைப் போக்க வீட்டிலேயே உள்ள இந்த இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.
எலுமிச்சை மற்றும் தேன்: ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை அரை டீஸ்பூன் தேனுடன் கலந்து கழுத்தில் தடவவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். எலுமிச்சையில் பழுப்பு நிறத்தை நீக்கும் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன, மேலும் தேன் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.
கடலை மாவு மற்றும் தயிர் பேக்: 2 டீஸ்பூன் கடலை மாவுடன் 1 டீஸ்பூன் தயிர் கலந்து பேஸ்ட் தயாரிக்கவும். கழுத்தில் தடவி, காய்ந்த பிறகு கழுவவும். கடலை மாவு சருமத்தை உரிந்து, தயிர் நிறத்தை பிரகாசமாக்கும்.
கற்றாழை ஜெல்: புதிய கற்றாழை இலையிலிருந்து ஜெல்லைப் பிரித்தெடுத்து கழுத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். கற்றாழை சருமத்தை குளிர்வித்து, இறந்த சரும செல்களை நீக்கி, புதிய பளபளப்பைக் கொண்டுவருகிறது.
உருளைக்கிழங்கு சாறு: உருளைக்கிழங்கை தட்டி, சாற்றை எடுத்து, பஞ்சு உதவியுடன் கழுத்தில் தடவவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவவும். உருளைக்கிழங்கில் கருமையை நீக்கும் இயற்கையான ப்ளீச்சிங் பொருட்கள் உள்ளன.
பேக்கிங் சோடா ஸ்க்ரப்: 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீரில் கலந்து ஒரு ஸ்க்ரப் தயாரிக்கவும். வாரத்திற்கு இரண்டு முறை இதைக் கொண்டு உங்கள் கழுத்தை சுத்தம் செய்யவும். இது சருமத்தை ஆழமாக சுத்தம் செய்து இறந்த சருமத்தை நீக்குகிறது.
வெள்ளரிக்காய் சாறு: வெள்ளரிக்காயை அரைத்து கழுத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். வெள்ளரிக்காய் சருமத்தை குளிர்வித்து, டானிங்கை நீக்க உதவுகிறது.