விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்டில், மீனா வீட்டை விட்டு கிளம்புகிறாள். அம்மா வீட்டிற்கு சென்ற மீனா கதறி அழுகிறார். இதனை பார்த்த அவர் நீ எதுவுமே காரணம் இல்லாமல் செய்ய மாட்டா, நீ நிம்மதியா தூங்கு எல்லாமே சரியாகிடும் என்று சொல்கிறார்.
மீனா வீட்டை விட்டு கிளம்பியது நல்லது என நினைத்த ரோகிணி காபி, சமையல், வீடு கூட்டுவது என அனைத்தையும் செய்கிறார். இதனை மொத்த குடும்பமும் ஆச்சரியமாக பார்க்க விஜயா மட்டும் ரோகிணிக்கு சப்போர்ட் செய்கிறார். மீனா இந்த வீட்டிற்கு மீண்டும் வராமல் இருக்கதான் ரோகிணி இதெல்லாம் செய்கிறாள் என முத்து கூறுகின்றான். உடனே ரோகிணிக்கும் முத்துக்கு சின்ன வாக்குவாதம் தொடங்குகிறது.
குடும்பத்தினர் தடுத்து நிறுத்துகிறார்கள். ஆனால் ரோகிணி மீது முத்துக்கு சந்தேகம் வருகிறது. அண்ணாமலையிடம் பேசிய முத்து இதுவரை எவ்வளவோ பிரச்சனை வந்து மீனா வீட்டை விட்டு சென்றதில்லை, தற்போது ஒன்றுமில்லாத பிரச்சனைக்கு வெளியேறியிருக்கிறார். அதற்கான காரணத்தை கண்டுபிடிப்பேன் என்று கூறுகிறார். இதனை கேட்ட ரோகிணி அதிர்ச்சி அடைகிறாள்.
மறுபுறம் சத்யா சிந்தாமணி மகள் என்று தெரியாமல் வீட்டில் நடக்கும் கஷ்டத்தை பகிர்ந்து கொள்கிறான். அவளும் மீனாவை நினைத்து வருத்தப்படுகிறார். அப்போது சத்யாவை பார்க்கவந்த முத்து, மீனா ஏதாவது சொன்னாலா என்று கேட்கிறான். இல்லை என்ன பிரச்சனை என்று சத்யா கேட்க நடந்த விஷயத்தை முத்து கூறுகிறார். இதற்காகவெல்லாம் அக்கா வீட்டிற்கு வரமாட்டாரே என்று சத்யா கூற,
ஆமாம் டா ஊருக்கு போனதில் இருந்தே மீனா ஒருமாதிரி இருக்கா என்று கூறிவிட்டு செல்கிறார். இதையடுத்து என்ன ஆனது? மீனாவை சமாதானப்படுத்தி முத்து மீண்டும் அழைத்து வந்தாரா? உண்மை அனைவருக்கும் தெரிய வருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கலாம்.



