சட்டம், ஒழுங்கை காப்பாற்ற தெரியாமல், மேடைகளில் ஏறிப் பொய் சொல்ல முதல்வருக்கு அசிங்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி..!

Annamalai Vs Stalin Updatenews360 1

மாநில அரசின் முதல் பணியான சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றத் தெரியாமல், மேடைகளில் ஏறிப் பொய் சொல்ல அசிங்கமாக இல்லையா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.


தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனையான, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்திலேயே, பல்வேறு குற்ற வழக்குகள் கொண்ட ஆதி என்ற நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தலைநகரில்,அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்துள்ள இந்தப் படுகொலை, திமுக ஆட்சியில் காவல்துறை முழுமையாக செயலிழந்துவிட்டதை நிரூபிக்கிறது.

தலைநகரின் மையப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொலை நடக்கிறது என்பது, காவல்துறையின் தோல்வி மட்டும் அல்ல. திமுக அரசின் நிர்வாகத் தோல்வி. கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களை, விரல் விட்டு எண்ணி விடலாம். எதிர்க்கட்சியினரைப் பழி வாங்க மட்டுமே காவல்துறையைப் பயன்படுத்தி, தமிழகக் காவல்துறையை முற்றிலுமாக முடக்கி வைத்திருப்பதுதான் திமுக அரசின் ஒரே சாதனை.

வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ மாணவியர், இளைஞர்கள் என, யாருமே திமுக ஆட்சியில் பாதுகாப்பாக உணரவில்லை. அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு வழங்க முடியாத இந்த திமுக ஆட்சியில், பொதுமக்கள் எங்கே பாதுகாப்பாக இருப்பது?

துண்டுச்சீட்டில் யாரோ எழுதிக் கொடுப்பதை, திமுக அரசின் சாதனை என்று மேடையில் வாசிப்பது மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.. மாநில அரசின் முதல் பணியான சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றத் தெரியாமல், மேடைகளில் ஏறிப் பொய் சொல்ல அசிங்கமாக இல்லையா?” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : ரவுடிகளின் தலைமையிடமாக மாறும் தமிழகம்; சிலம்பம் சுற்றும் முதலமைச்சர்.. 3 மாதங்களுக்கு முடிவு வரும்.. இபிஎஸ் காட்டம்..!

RUPA

Next Post

இவர்களுக்கு எலுமிச்சை விஷம் போன்றது..! விலகி இருக்கவில்லை எனில், அது ஆபத்து..!

Mon Jan 12 , 2026
எலுமிச்சை நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த எலுமிச்சை, அமெரிக்காவில் உள்ள வில்லியம் பேட்டர்சன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின்படி, உலகின் ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாகும். அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை ஆற்றலுடன் வைத்திருக்கவும் உதவுகின்றன. இரைப்பை அழற்சி பிரச்சனைகள்: இருப்பினும், சில உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது துளியும் நல்லதல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆம், மருத்துவர்களின் கூற்றுப்படி… இரைப்பை […]
Lemon 2025

You May Like