மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த இஸ்ரேல்!. அகதிகள் முகாம் மீது வான்வழி தாக்குதல்!. 14 பேர் பலி!. லெபனானில் பயங்கரம்!.

israel airstrikes lebanon

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், லெபனானில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் பலியாகினர்.


இஸ்ரேல், லெபனான் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படை இடையே 2024ம் ஆண்டு போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், சிடான் நகரத்தில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.

இந்நிலையில், அங்கு செயல்பட்டு ஹமாஸ் இயக்கத்தின் பயிற்சி முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர் தெற்கு லெபனானில் உள்ள பல கிராமங்களில் உள்ள இலக்குளை குறி வைத்து தாக்க போவதாக இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. அங்குள்ள மக்கள் உடனடியாக வெளியேறுமாறும் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஷெஹூர், டெய்ர், கிபா ஆகிய கிராமங்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தொடங்கி இருக்கிறது. ஹமாஸ் எங்கு இருந்தாலும் தாக்குதல் தொடரும் என்றும் அறிவித்துள்ளது. ஆனால், இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஹமாஸ் முற்றிலும் நிராகரித்து உள்ளது. சிடான் நகரில் எந்த இடத்திலும் பயிற்சி முகாம் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

Readmore: ஷாக்!. மியான்மரில் 71% கிணறுகள் விஷமாகிவிட்டன!. 1 கோடி மக்களுக்கு ஆபத்து!. WHO எச்சரிக்கை!.

KOKILA

Next Post

இந்த 5 பொருட்கள் உங்கள் சமையலறையில் இருக்கவே கூடாது!. உடனடியாக தூக்கி போடுங்கள்!. ஏன் தெரியுமா?

Thu Nov 20 , 2025
சமையலறை சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் இருக்கும், ஆனால் அது அழுக்காக இருந்தால் அல்லது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்டிருந்தால், அது குடும்பத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும். சமையலறை என்பது எந்த வீட்டிலும் மிக முக்கியமான பகுதியாகும். குடும்பத்திற்கு தினமும் உணவு தயாரிக்கப்படும் இடம் இது, குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் அடித்தளத்தை வழங்குகிறது. சுத்தமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சமையலறை நேர்மறை ஆற்றலைப் பராமரிக்கிறது, ஆனால் குப்பைகள் அல்லது […]
Harmful Kitchen items

You May Like