டமாஸ்கஸில் உள்ள சிரிய இராணுவத் தலைமையகத்தை இஸ்ரேல் தாக்குதல் தாக்கியது.
டமாஸ்கஸில் உள்ள சிரியாவின் முக்கிய இராணுவத் தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும் தாக்கப்பட்டதாக இரண்டு சிரிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையில், “சிறிது நேரத்திற்கு முன்பு, சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியில் உள்ள சிரிய ஆட்சியின் இராணுவ தலைமையகத்தின் நுழைவாயிலை இஸ்ரேலிய இராணுவம் தாக்கியது.” என்று தெரிவித்துள்ளது.
தெற்கு சிரியாவில் உள்ள ட்ரூஸ் இன மக்கள் அதிகமாக வாழும் ஸ்வீடா நகரில் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்தன. அங்கு அரசாங்கப் படைகளுக்கும் உள்ளூர் ட்ரூஸ் (Druze) பிரிவுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் முறிந்துள்ளது. தனது தாக்குதல் ட்ரூஸ் சமூகத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ட்ரூஸ் மக்கள் 10 ஆம் நூற்றாண்டில் இஸ்மாயிலி ஷியா இஸ்லாத்திலிருந்து தோன்றிய ஒரு மத சிறுபான்மையினர் ஆவர்.. உலகளவில் ஒரு மில்லியன் ட்ரூஸ் இன மக்கள் வாழ்வதாக கூறப்படும் நிலையில் அவர்களில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிரியாவில் வாழ்கின்றனர். லெபனான் மற்றும் இஸ்ரேலிலும் குறிப்பிடத்தக்க மக்கள் தொகை காணப்படுகிறது. 1967 மத்திய கிழக்குப் போரில் இஸ்ரேல் சிரியாவிலிருந்து கைப்பற்றி 1981 இல் இணைக்கப்பட்ட ஒரு பகுதி.
இந்த வார தொடக்கத்தில், உள்ளூர் ட்ரூஸ் போராளிகளால் முன்னர் கைப்பற்றப்பட்ட பகுதிகளின் மீது கட்டுப்பாட்டை நிலைநிறுத்த புதிய இஸ்லாமிய தலைமையிலான அரசாங்கத்தின் முயற்சியில் சிரியப் படைகள் ஸ்வீடாவிற்கு அனுப்பப்பட்டன.
கடந்த ஞாயிற்றூக்கிழமை ட்ரூஸ் குழுக்களுக்கும் சன்னி முஸ்லிம் பெடோயின் பழங்குடியினருக்கும் இடையே கடுமையான சண்டை வெடித்தபோது, 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இரு சமூகங்களுக்கு இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நீடித்து வருகிறது.. எனினும் அங்கு அமைதியை மீட்டெடுக்க சிரிய படைகள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.