நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து முன்னணி நிறுவனங்களும் EV வாகன உற்பத்தியில் களமிறங்குகின்றன. ஏற்கனவே ஹோண்டா, டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் இறங்கியுள்ளது.
அந்த வகையில், ஒரே ஜார்ஜிங்கில் 300 கிமீ வரை செல்லும் மின்சார பைக் ஒன்றை டாடா நிறுவனம் அறிமுக்கப்படுத்தப்பட இருக்கிறது. டாடா எலக்ட்ரிக் பைக் உற்பத்தி சந்தையில் நுழையும் நேரத்தில், நகர்ப்புற போக்குவரத்தை மறுசீரமைப்பதில் இது ஒரு முக்கிய படியாக இருக்கும் என்று சந்தை வட்டாரங்கள் கருதுகின்றன.
சிறப்பம்சங்கள் என்னென்ன? நீண்ட செயல்திறன் மற்றும் நீடித்த உழைப்புக்கு லித்தியம் அயன் பெட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போனுடன் இணைத்து கொள்ளும் வகையில் ப்ளூட்டூத் வசதியும் உள்ளது. நகருக்குள் வாகனத்தை இயக்கும் போது எனர்ஜி ரெகவரி சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இகோ, சிட்டி, ஸ்போர்ட்ஸ் என மூன்று மோட்கள் உள்ளன.
நீண்ட தூர பயணத்தின் போது ஓய்வெடுக்கும் நேரத்திற்குள் அதிவேகமாக சார்ஜிங் செய்யும் வசதி உள்ளது. டாடாவின் இந்த இ-பை ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. 4-5 மணி நேரத்தில் 0 முதல் 100 சதவீதம் வேகமாக சார்ஜ் ஆகிறது.
EV பைக்குகளுடன், அவற்றுக்குத் தேவையான சார்ஜிங் நிலையங்கள் விஷயத்திலும் டாடா முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிகிறது. டாடா பவர் ஆர்ம் மூலம் EV சார்ஜிங் உள்கட்டமைப்பை விரைவுபடுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, டாடா ஏற்கனவே நாடு முழுவதும் EV சார்ஜிங் நிலையங்களை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த நிறுவனத்திலிருந்து வரவிருக்கும் EV இருசக்கர வாகனங்களுக்கு ஏற்ப மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
விலை என்ன? பேஸ் மாடல் ரூ.50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையும், புரோ மாடல் ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையும், ஸ்போட்ஸ் மாடல் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.