நாடு முழுவதும் நாளை பந்த் அறிவிப்பு.. ஆட்டோ பேருந்துகள் இயங்காது..!

strick

நாடு தழுவிய அளவில் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன.

மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், அரசுப் பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனப் பெருமளவிலானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வேலைநிறுத்தம், தமிழகம் முழுவதும் பொது வாழ்க்கையைப் பாதிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, அரசுப் போக்குவரத்து சேவைகள், வங்கிப் பணிகள், அரசு அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படலாம் என்பதால், பொதுமக்கள் அதற்கேற்ப தங்கள் திட்டங்களை வகுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள 17 அம்சக் கோரிக்கைகளில், குறைந்தபட்ச ஊதிய உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதைக் கைவிடுதல், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துதல், தொழிலாளர் சட்டத் திருத்தங்களை வாபஸ் பெறுதல் போன்ற பல முக்கிய அம்சங்கள் அடங்கும். இக்கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் போராட்டங்கள் தொடரும் என தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

Read more: அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அரசாணை வெளியீடு…!

Next Post

ஷாக்!. புறா எச்சங்களால் கடும் சுவாச நோய் அபாயம்!. மாநகரம் முழுவதும் உள்ள 'கபூதர் கானாக்களை' மூட அரசு உத்தரவு!

Tue Jul 8 , 2025
புறாக்களின் எச்சங்கள் மற்றும் இறகு கழிவுகளால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் காரணமாக, மும்பையில் உள்ள ‘கபூதர் கானாக்கள்’ (புறாக்களுக்கு உணவளிக்கும் இடங்கள்) உடனடியாக மூடுமாறு மகாராஷ்டிரா அரசு பிரஹன் மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 3ம் தேதி மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பொது இடங்களில் தொடர்ந்து புறாக்களுக்கு உணவளிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பல உறுப்பினர்கள் எச்சரித்தனர். இந்தப் பிரச்சினையை எழுப்பிய சிவசேனா தலைவரும் பரிந்துரைக்கப்பட்ட எம்.எல்.சி.யுமான மனிஷா கயாண்டே, இந்த […]
kabootar khanas close mumbai 11zon

You May Like