தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் மேற்கு மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக திகழ்ந்தவர் செங்கோட்டையன். எடப்பாடி பழனிச்சாமியுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோருடன் இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் ட்விஸ்டாக தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதன் தொடர்ச்சியாக தனது எம்.எல்.ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அதன்பிறகு பனையூர் சென்று தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசினார். இந்த நிலையில் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி திலகபாமா உள்ளிட்டோர் பனையூர் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கு அனைவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
செங்கோட்டையனுடன் முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த குறிஞ்சிநாதன், முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்.
தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் அமைப்பு பொதுச்செயலாளராகவும் செங்கோட்டையன் செயல்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Read more: அதிக திரை நேரம் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.. எப்படி சரிசெய்வது? பயனுள்ள டிப்ஸ்!



