ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை நிறைவேற்றத்தை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தைச் சோ்ந்த 38 வயது செவிலியரான நிமிஷா பிரியா, யேமன் தலைநகா் சனாவில் அப்து மாஹதி என்பவரும் இணைந்து கிளினிக் ஒன்றை நடத்தி வந்தாா். பின்னா் நிமிஷாவின் வருமானம், நகைகள், கிளினிக்கின் உரிமம், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு, மாஹதி மிரட்டியதாக கூறப்படுகிறது.
2017-இல் மாஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போா்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மாஹதி உயிரிழந்தாா். யேமன் குடிமகன் மாஹதியைக் கொலை செய்ததற்காக நிமிஷா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்தக் கொலை வழக்கில் நிமிஷாவுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனை அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தால் கடந்த 2023-இல், உறுதி செய்யப்பட்டது. அதன்படி நிமிஷாவுக்கு நாளை16-ஆம் தேதி மரண தண்டனையை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நிமிஷாவின் மரண தண்டனை ஏமன் அரசு ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அதிகாரிகளின் தொடர்ச்சியான தலையீடு மற்றும் இராஜதந்திர முயற்சிகளுக்குப் பிறகு, மரண தண்டனையை ஒத்திவைக்க ஏமன் அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
Read more: Flash: TNPSC குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு தேதி அறிவிப்பு..!