“ கலவரத்தை தூண்டும் கயவர்களுக்கு இபிஎஸ் துணை போவது வெட்கக்கேடு.. CM ஸ்டாலின் இருக்கும் வரை அது நடக்காது..” அமைச்சர் ரகுபதி காட்டம்!

eps raghupathi 1

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பாஜக RSS ன் கைக்கூலியாக மாறி அண்ணாதிமுகவை அமித்ஷாதிமுக வாக மாற்றிய அடிமை பழனிசாமி, தமிழ்நாட்டு மக்களின் நலனைப் பற்றி துளியும் அக்கறையின்றி அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணைபோய் நிற்பது வெட்கக்கேடு.


மதப்பிரிவினைவாத சக்திகளும் , அடிமைக் கைக்கூலிகளும் எவ்வளவு முயன்றாலும், மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க முடியாது. மதங்களைக் கடந்து உறவுகளாய் வாழ்ந்துவரும் தமிழ்நாட்டு மக்களிடம் உங்களின் தகிடுதத்தம் எதுவும் எடுபடாது. எதிரிகளுக்கும் , துரோகிகளுக்கும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

முன்னதாக இந்த விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.. அவரின் பதிவில் “ மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மாண்புமிகு உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் விடியா திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘எம்மதமும் சம்மதம்’ – எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த ஸ்டாலின் மாடல் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

திருப்பரங்குன்றத்தில் ஏன் பதற்றம்?

கார்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று மதுரை உயர்நீதின்றக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடந்த 1-ம் தேதி தீர்ப்பு வழக்கினார்..

இதனிடையே இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் கோயில் பதினாறுகால் மண்டபம் பகுதியில் கூடி கந்தசஷ்டி கவசம் பாராயணத்தில் ஈடுபட்டனர்.. மாலை 4 மணியளவில் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட தீபம் ஏற்றும் பொருட்கள் அனைத்தும் கீழே இறக்கப்பட்டன.. மாலை 6.05 மணியளவில் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டும் கோயில் நிர்வாகம் சார்பில் மகா தீபம் ஏற்றப்பட்டது..

எனினும் இந்த உத்தரவு நேற்று அமல்படுத்தப்படாத நிலையில், மனுதாரர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது திருப்பரங்குன்ற மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.. 10 பேர் சென்று மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.. இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை எனில் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என்று நீதிபதி எச்சரித்தார். மேலும் மனுதாரர் 10 நபர்களுடன் தீபம் ஏற்ற காவல்துறை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

Read More : Flash : நயினார் நாகேந்திரன் கைது! திருப்பரங்குன்றத்தில் மீண்டும் பதற்றம்..!

RUPA

Next Post

குழந்தைப்பேறு முதல் வாழ்க்கை சிக்கல்கள் வரை.. பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பகவதி அம்மன்..! கோவில் எங்க இருக்கு தெரியுமா..?

Fri Dec 5 , 2025
From childbirth to life's problems.. Bhagavathi Amman fulfills the prayers of devotees..! Do you know where the temple is..?
amman1 1669696813

You May Like