“ யாரை திருப்திப்படுத்த ஹிந்து மத விரோத செயல்கள்..? திமுக இதை நிறுத்தி கொள்வது நல்லது…” வீடியோ வெளியிட்டு அண்ணாமலை எச்சரிக்கை..”

67bc6feae8ae1 annamalai slams dmks language policy hypocrisy 241101450 16x9 1

போலி மதச்சார்பின்மை பேசி, தொடர்ந்து தமிழக மக்களின் வழிபாட்டு உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கும் திமுக, தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக் கொள்வது நல்லது என்று அண்ணாமலை எச்சரித்துள்ளார்.


தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் “ திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செல்வ முத்துக்குமரன் திருக்கோவில் அப்பகுதி மக்களின் குலதெய்வ வழிபாட்டிற்கான பழமையான கோவிலாகும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அலகுமலை முருகன் கோவிலுடன் தொடர்புடைய கோவில் இது.

இந்த நிலையில், நேற்றைய தினம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பழி வாங்குவதற்காக, இன்று இந்த பழமையான திருக்கோவிலை, காவல்துறையைக் குவித்து திமுக அரசு முற்றிலுமாக இடித்திருக்கிறது. திமுக அரசின் இந்த ஹிந்து மத விரோத, தரங்கெட்ட நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஹிந்து கோவில்களுக்கு சொந்தமான இடங்களை மீட்க வக்கற்ற திமுக அரசு, பொதுமக்கள், தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வரும் பழமையான கோவில்களை தொடர்ந்து இடித்துக் கொண்டிருக்கிறது. யாரை திருப்திப்படுத்த இது போன்ற ஹிந்து மத விரோத செயல்பாடுகளை நடத்துகிறது திமுக?

செல்வ முத்துக்குமரன் திருக்கோவிலை இடிப்பதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய, ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர், ஐயா திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் மீது, காவல்துறை நடத்திய பலப்பிரயோகம் காரணமாகக் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பக்தர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

போலி மதச்சார்பின்மை பேசி, தொடர்ந்து தமிழக மக்களின் வழிபாட்டு உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கும் திமுக, தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்தி கொள்வது நல்லது. பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.” என்று தெரிவித்துள்ளார்..

Read More : “அவர் அமித்ஷாவா? இல்ல அவதூறுஷாவா? நான் இருக்கும் வரை நீங்க நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது..” CM ஸ்டாலின் சூளுரை..!

RUPA

Next Post

ரிசர்வ் வங்கி வரம்பற்ற அளவில் நோட்டுகளை அச்சிட்டால் என்ன நடக்கும்? ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது பற்றி முடிவெடுப்பது யார்?

Wed Jan 7 , 2026
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து, வேலைவாய்ப்பு குறையும்போது, ​​​​சாதாரண குடிமகனின் மனதில் ஒரு கேள்வி அடிக்கடி எழும்.. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிக நோட்டுகளை அச்சிடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியாதா? என்ற கேள்வி தான் அது.. ரிசர்வ் மத்திய வங்கிக்கு வரம்பற்ற கரன்சி நோட்டுகளை அச்சிடும் அதிகாரம் உள்ளதா? உண்மையில், பணம் அச்சிடுவது என்பது ஒரு இயந்திரத்தை இயக்குவது மட்டுமல்ல, அதற்குப் பின்னால் இந்தியப் பொருளாதாரத்தின் சிக்கலான விதிகள் […]
indian currency printing 1

You May Like