மத்திய அரசின் முக்கியப் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் பயிற்சி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது, பொறியியல், பட்டயக் கணக்காளர் (CA/CMA) மற்றும் முதுகலை வணிக மேலாண்மை (MBA) போன்ற உயர்கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களுக்கு மத்திய அரசுத் துறையில் ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான வேலையைப் பெறுவதற்கான அரிய வாய்ப்பாகும்.
காலியிடங்கள் மற்றும் சம்பள விவரம் : மொத்தம் 42 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு பயிற்சி காலத்தில் மாதந்தோறும் ரூ.40,000 உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சிக்கு பிறகு, ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க தகுதிகள் :
* சிவில், எலக்ட்ரிக்கல் அல்லது ஆர்க்கிடெக்சர் போன்ற பிரிவுகளில் பி.இ. / பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* பட்டயக் கணக்காளர் (CA) அல்லது செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் (CMA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* சட்டம் (LLB) அல்லது முதுகலை வணிக மேலாண்மை (MBA/PGD) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களின் வயது 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, பட்டியல் சாதிகள் / பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் இரண்டு கட்டத் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதலில், துறை சார்ந்த அறிவு மற்றும் பொது அறிவைச் சோதிக்கும் கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள், அடுத்த கட்டமாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி..?
தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகள் https://hudco.org.in/ என்ற இணையதளம் மூலம் அக்.17ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.



