நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : New India Assurance Company (NIACL)
வகை : மத்திய அரசு வேலை
மொத்த காலியிடங்கள் : 500
பணியின் பெயர் : Apprentice
பணியிடம் : இந்தியா முழுவதும்
கல்வித் தகுதி : ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும்
வயது வரம்பு : 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.9,000 சம்பளம்
விண்ணப்ப கட்டணம் :
பெண்கள்/எஸ்சி/எஸ்டி – ரூ.708
General/ OBC – ரூ.944
PwBD – ரூ.472
தேர்வு செய்யப்படும் முறை :
* Online Examination
* Test of Local Language
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.06.2025
விண்ணப்பிப்பது எப்படி..?
அனைத்து விண்ணப்பதாரர்களும் “புதிய இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் உடன் பயிற்சி” பெறுவதற்கு https://nats.education.gov.in/ என்ற இணைப்பைக் கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முதலில் NATS போர்ட்டலில் உள்நுழைந்து NIACL-க்கு எதிரே காட்டப்பட்டுள்ள விண்ணப்பிக்கும் பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். பயிற்சிக்கு வெற்றிகரமாக விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின் பதவிக்கும் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான இணைப்புள்ள BFSI SSC (naik.ashwini@bfsissc.com) இல் இருந்து மின்னஞ்சல் தகவல் அனுப்பப்படும்.