மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மிக முக்கியமான பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பான உளவுத் துறை (Intelligence Bureau – IB), தற்போது வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள 362 Multi-Tasking Staff (MTS) பணியிடங்களை நிரப்புவதற்காக, அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும் (14/12/2025 தேதியின்படி). இந்தப் பணியில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
பணியின் பெயர்: Multi-Tasking Staff (General)
மொத்த காலி இடங்கள்: 362
கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பள நிலை: ஊதிய நிலை 1 (Pay Level 1)
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான mha.gov.in அல்லது ncs.gov.in மூலமாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் தொடங்கும் நாள்: நவம்பர் 22, 2025
விண்ணப்பிக்க இறுதி நாள்: டிசம்பர் 14, 2025 (இரவு 11:59 மணி வரை)
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த Multi-Tasking Staff (General) Examination 2025-க்கான தேர்வு, இரண்டு கட்டங்களாக (Tier 1 மற்றும் Tier 2) எழுத்துத் தேர்வு மற்றும் ஆவணச் சரிபார்ப்பு மூலம் நடத்தப்பட்டுப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு முறை, விண்ணப்பக் கட்டணம், எந்தெந்த மாநிலங்களில் எத்தனை காலியிடங்கள் உள்ளன போன்ற அனைத்து முக்கியமான விவரங்களும் அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, 10-ஆம் வகுப்பு முடித்து மத்திய அரசுப் பணிக்குச் செல்ல விரும்பும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



