சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுமக்கள் பெரும்பாலோர் தங்கம் விலை குறைய வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக, தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் மக்கள் திணறி வருகின்றனர்.
சென்னையில் நேற்று (ஆ.5) நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.9370 ஆக விற்பனை செய்யப்பட்டது. கடந்த மாதம் வரை சற்று நிலையான நிலையில் இருந்த தங்கம், தற்பொழுது பக்கவாட்டே இல்லாமல் உயர்வதைக் காணலாம். இந்நிலையில், பிரபல பொருளாதார விமர்சகர் ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை தொடர்பாக தன் யூடியூப் பக்கத்தில் அளித்துள்ள விளக்கம் அளித்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன் கூறுவதாவது: “தங்கம் ரூ.200 உயர்ந்தது பெரிய விஷயம் இல்லை. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,000 என்ற நிலைக்கு வந்துவிட்டது. அதில் ரூ.200 என்றால் வெறும் 2% உயர்வுதான். இதைப் பெரிய ஏற்றம் என சொல்ல முடியாது. பங்குச் சந்தையிலும் இது போலவே ஏற்ற இறக்கங்கள் சகஜம்.
நம்மில் பலர் இன்னும் தங்கம் விலை ரூ.3000 – 4000 என்ற நிலையில்தான் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், நிலைமை மாறிவிட்டது. இப்போது தங்கம் விலை ரூ.9000 – 9500 என்ற பேஸில் நிலைத்துவிட்டது. முதலில் நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாளை தங்கம் விலை ரூ. 12,000 போய்விட்டது என்றால் தினசரி கூட ரூ.200 ஏறி இறங்கும். இப்போதே பாகிஸ்தானில் போய் பாருங்கள். தினசரி 200- 300 ஏறி இறங்கும். அதுதான் நார்மல். இதை எல்லாம் சரிவு எனச் சொல்ல முடியாது. தங்கம் எதிர்மறை சூழ்நிலையில் இருந்தால் கூட விலை அதிகபட்சம் ரூ.8500 வரை மட்டுமே குறையும். அதற்கும் கீழே குறைய வாய்ப்பு இல்லை. தற்போது தினசரி ரூ.200-300 ஏற்றம் என்பது நார்மலாகவே பார்க்க வேண்டும்,” என அவர் விளக்கினார்.
400 கிராம் தங்கம் வைத்திருக்க வேண்டும்: தங்கம் தொடர்ந்து விலை உயர்த்தும் தன்மை கொண்டது. அதனால்தான் நான் சொல்கிறேன், ஒரு குடும்பம் குறைந்தது 400 கிராம் தங்கம் வைத்திருக்க வேண்டும். இப்போதே சிறு தொகையைக் கொண்டு டிஜிட்டல் கோல்ட் வாங்கலாம். கையில் ரூ.2000 இருந்தால் அதில் தங்கம் வாங்கி சேமிக்கலாம். ஒரு கட்டத்தில் அதை நகையாக மாற்றிக்கொள்ளலாம்,” என ஆனந்த் சீனிவாசன் ஆலோசனையும் பகிர்ந்துள்ளார்.
Read more: ரூ.20,000-க்கு மேல் ரொக்க பரிமாற்றம் செய்தால் நடவடிக்கை.. சார்பதிவாளர்களுக்கு அதிரடி உத்தரவு..!!